Ashritha Sreedas : விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய `நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் முந்தைய பாகத்தில், வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அஷ்ரிதா ஸ்ரீதாஸ். 3 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தற்போது மாடலிங், சீரியல் என பிஸியாகச் சுழன்றுக் கொண்டிருக்கிறார்.
’பிறந்தநாள் பரிசா அம்மா வேணும்ப்பா’: நிறைவேறுமா கயலின் ஆசை?
அஷ்ரிதாவின் படங்கள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றன. அஷ்ரிதாவின் பூர்வீகம் கேரளா. ஆனால் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். அவரின் அப்பா புரொடக்ஷன் மேனேஜரா இருந்தவர். பத்தாவது படிக்கும் போது அப்பாவை இழந்த அஷ்ரிதா, அவர் மூலமாக, மூன்று வயதிலேயே மீடியாவில் நுழைந்திருக்கிறார். `அப்பா அம்மா’ என்கிற அந்த சீரியல் தான் அஷ்ரிதாவுக்கு முதல் அறிமுகத்தைக் கொடுத்தது. சீரியல் வாய்ப்பு தொடர்ந்து அமையாத காரணத்தினால், அந்த நேரங்களில் மாடலிங் பக்கம் கவத்தைத் திருப்பினார் அஷ்ரிதா. இப்போது, மாடலிங், சீரியல், சினிமான்னு பிஸியாக இருக்கிறார்.
”எப்பவும் சீன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கண்ணை மூடி, அப்பாவை நினைச்சுப்பேன். முதல் சீரியலில் `நாகேஷ்’ தாத்தாவோடு நடிச்சேன். அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட் என அந்தக் குழந்தை வயசில் தெரியாது. அவரோடு ஜாலியா விளையாடுவேன். ஷீட்டிங் ஸ்பாட்ல என்கிட்ட நிறைய விடுகதைகள் கேட்பார். அவர் நடிகர் மட்டுமல்ல, மிகப்பெரிய ஜீனியஸ். அத்தனை அழகா கணக்குப் போடுவார். சின்ன சின்ன விஷயங்களை தெளிவா புரிய வைப்பார். அவருடன் நடிச்சது என் பாக்கியம்” என மகிழ்கிறார் அஷ்ரிதா.
,
தந்தையின் ஆசை அஷ்ரிதாவை நடிகையாக ஆக்க வேண்டும் என்பது தான். இதை அவரிடம் சொல்லிச் சொல்லி வளர்த்தராம் அவரது அம்மா. அதனால் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மறுபடியும் காலேஜ் படிக்கும்போது, ’கனா காணும் காலங்கள்’ கல்லூரியின் கதையில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அப்பா நலம்; வதந்திகள் வேண்டாம் – பிரணாப் முகர்ஜி மகன் ட்வீட்! ஆனால்…
,
அந்த சீரியல் மூலம் பள்ளி கல்லூரி இளைஞர்கள் மனதில் தனக்கென ஓரிடத்தையும் பிடித்து விட்டார் அஷ்ரிதா. இந்த சீரியலில் நடித்திருக்கும் அனைவருமே இன்று பெரிய ஸ்டார்கள். ஆனால் அன்று போல், இன்றும் அவர்களின் நட்பு தொடர்கிறது. அப்பாவை இழந்த அஷ்ரிதாவுக்கு இப்போது அம்மாவும், அண்ணனும் தான் ஃபுல் சப்போர்ட்டாம். மகளின் மேக்கப் மற்றும் காஸ்ட்யூம் போன்ற விஷயங்களை அஷ்ரிதாவின் அம்மாவே பார்த்துக் கொள்கிறார். நடிப்பில் மட்டுமல்லாமல் டப்பிங்கிலும் ஆர்வம் மிகுந்த அஷ்ரிதா, விரைவிலேயே அதிலும் கால் பதிப்பேன் என்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”