பாண்டியன் ஸ்டோர்ஸ்: மகள விட மருமகன் கதிர் அசால்ட்டா ஸ்கோர் பண்றாரே!

Vijay TV Serials: கதிர் முல்லையின் அன்யோன்யமான அன்பு ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது.

Tamil Serial News, Vijay TV pandian stores kathir mullai
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

Vijay TV Pandian Stores Serial: சின்னத்திரை ரசிகர்களுக்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்றால் அலாதி பிரியம். கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்திய இந்த சீரியலில், மூர்த்தி – தனம், ஜீவா – மீனா, கதிர் – முல்லை என மூன்று ஜோடிகள். இவர்களுக்குள் இருக்கும் அன்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

உலக புகைப்பட தினம்: இந்தாண்டு எங்கள் புகைப்படக் கலைஞர்களின் சிறந்த க்ளிக்!

மூர்த்தியின் மூத்த தம்பி ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை. முதலில் இருவருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், போகப் போக புரிதல் உண்டாகிறது. தற்போது ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள சீரியல் ஜோடிகளாக கதிரும், முல்லையும் மாறியிருக்கிறார்கள்.

கதிர் முல்லையின் அன்யோன்யமான அன்பு ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது. கணவன் – மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழும். நல்ல தம்பி, கணவனாக இருந்த கதிர், தற்போது நல்ல மருமகனாகவும் மாறியிருக்கிறான்.

இப்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், ’இன்னைக்கு உங்க அம்மாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகணும் இல்ல’ என்கிறான் கதிர். ’இன்னிக்கிங்களா அது’ என யோசிக்கிறாள் முல்லை. ’இன்னைக்கு தான் வேற என்னைக்கு, பத்து நாள் கழிச்சு கூட்டிட்டு வரணும்ன்னு சொன்னாங்கல்ல, அப்போ இன்னைக்கு தான். முதல்ல போய் கிளம்பு’ என்கிறான் கதிர்.

அதோடு, ‘அண்ணி இவங்க அம்மாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய்ட்டு வந்திடுறேன் அண்ணி. இன்னைக்கு வந்து செக் பண்ண சொன்னாங்க. கொஞ்சமாவது ஞாபகம் இருக்காண்ணு பாருங்க’ என தனத்திடம் கூறுகிறான். ’அதான் நீ ஞாபகம் வச்சிருக்கியே, அது போதாத’ என அண்ணி புன்னகைக்கிறார். ’இல்ல அண்ணி கரெக்டா செக் பண்ணிடனும் இல்ல, அப்புறம் பிரச்னை எதும் வந்திடும்’ என கதிர் சொல்ல, அண்ணி அவனை கிண்டல் செய்கிறார்.

Tamil News Today Live : பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுகள் – தமிழக அரசு உத்தரவு

இதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த முல்லையை, ‘ஏய் போய் கிளம்பு’ என்கிறான். ‘உடனே கிளம்பணுமா’ என முல்லை கேட்க, ‘உடனே தான் கிளம்பனும்’ என்கிறான் கதிர். ’மருமகனுக்கு இருக்க அக்கரை, மகள் உனக்கு இல்லாம போச்சு. எனக்கு எங்க அத்தை ரொம்ப முக்கியம்’ என கிண்டல் செய்த தனம், ‘இந்தா சட்னிக்கு எல்லாம் எடுத்து வச்சிருக்கேன், சீக்கிரம் அரை சாப்பிட்டு கிளம்பனும் இல்ல’ என முல்லையிடம் கூற, ‘அண்ணி ஏன் அண்ணி’  என்கிறான் கதிர். ‘என்னடா சாப்பிடாமயே போறேன்ங்குறியா?’ என்கிறார் தனம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Web Title: Tamil serial news vijay tv pandian stores serial promo video kathir mullai dhanam

Next Story
’கண்ணு பட்டுருச்சு மேடம்’: குஷ்பூவின் அறுவை சிகிச்சைக்கு ரசிகர்களின் ரியாக்‌ஷன்Khushbu Eye Operation
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express