Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலிய பத்தரமா பாத்துக்கோங்க... மீனாவுக்கு கோரிக்கை

பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hema Rajkumar

பாண்யன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா ராஜ்குமார்

மயிலாடுதுறையில் பிறந்த நடிகை ஹேமா, அங்குள்ள உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக மீடியாவில் தனது பணியை தொடங்கினார்.  அதன் பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். 

Advertisment
publive-image

மேலும் பிற சில செய்தித் தொலைகாட்சிகளிலும் பணியாற்றியுள்ள இவர், விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

publive-image

தொடர்ந்து பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். மேலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.

publive-image

ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது  விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ்குமார் சிறப்பாக நடித்து வருகிறார்.

publive-image

இந்த சீரியலில் இவர் வில்லியா அல்லது நல்லவரா என்ற கேள்வி எழுந்து வந்தாலும் மீனா கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், தனியாக ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஏன் இப்படி இருக்கு? பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலி உடையாம பாத்துக்கோங்க என்று கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment