Advertisment

கல்யாண களை வந்தாச்சு..! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை நிச்சயதார்த்த வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
கல்யாண களை வந்தாச்சு..! பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை நிச்சயதார்த்த வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை கவிதா கவுடாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் டிவி சீரியல்களில் விஜய் டிவி சீரியலுக்கு தனி இடம் உண்டு. இதில் நாள்தோறும் புதிய திருப்பங்களுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப உறவுகளை மையமாக வைத்து வெளியாகி வரும் இந்த சீரியலில், ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன், சரவண விக்ரம், காவிய அறிவுமணி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

குடும்ப உறவுகளை மையமாக வைத்து வெளியாகி வரும் இந்த சீரியல் தமிழ் மட்டுமல்லாது, இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியலுக்கு மற்ற மொழிகளிலும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கு தனித்தியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்கள் சீரியல் மட்டுமல்லாது தங்களது சொந்த வாழ்வில் எது செய்தாலும் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

மேலும் இந்த சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ராவின் திடீர் மரணம் தமிழகத்தில் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் காவிய அறிவுமணி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது இந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மீனா கதாப்பாத்திரத்தில் ஹேமா நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில்லத்தனம் கலந்த கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் இந்த சீரியலில் ஹேமாவுக்கு முன்பு மீனாவாக நடித்தவர் கவிதா கவுடா. சீரியலின் தொடக்கத்தில் மீனாவாக நடித்து வந்த இவர், கன்னடா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு வெளியேறினார். அதன்பிறகு தான் ஹேமா மீனா கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கன்னட நடிகையான கவிதா கவுடா தமிழில், மகாபாரதம், நீலி ஆகிய தொடர்களிலும், கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கவிதா கவுடாவுக்கு தன்னுடன் லட்சுமி பிரம்மா என்ற தொடரில் நாயகனாக நடித்த சந்தன் குமார் என்பருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment