மரண காட்சியில் நடித்தது வருத்தமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா பதில்

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மரணகாட்சியின் நடித்தது குறித்து நடிகை ஷீலா மனம் திறந்துள்ளார்.

Pandian Stores Sheela Say About That Serial : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பத்தின் நன்மைகள், என குடுபம்ப வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலருக்கும் உணர்த்திய இந்த சீரியல் கடந்த ஒரு வாரமாக ரசிகர்களை சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் முக்கிய நபராக இருந்த லக்ஷ்மி அம்மா கடந்த வார தொடக்கத்தில் திடீர் மரணமடைந்தார். அதன்பிறகு ஒளிபரப்பான எபிசோடுகள் அனைத்தும் அவரது மரணத்தை சுற்றியே கதை அமைச்சப்பட்டிருந்தது. மேலும் ஒரு வீட்டில் ஒருவர் மரணமடைந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவிற்கு அனைத்து சாஸ்திரங்களும் இந்த சீரியலில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் கடைசி மகன் கண்ணன் அம்மாவை கடைசியாக பார்க்க வருவானா என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.  

இந்த சீரியலின் எபிசோடுகள் குறித்து ரசிகர்கள் பலரும் தங்களது வருத்த்தை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து சீரியலை பார்த்து வரும் ரசிகர்கள் கூட தற்போது ப்ரமோவை பார்த்தே வருத்தமடைகின்றனர். இந்த தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதில் லக்ஷ்மி அம்மாவாக நடித்த நடிகை ஷீலா தான் மரணமடைந்த்து போன்று நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் கூறுகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் முதல் நாளில் இருந்து 3 வருடங்களாக நடித்திருக்கிறேன்.  நல்ல பெயர் வாங்கி கொடுத்த இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே செல்கிறோம் என்ற போது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. மற்றபடி மரண காட்சிகளில் நடித்தது எல்லாம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடைசி காட்சிகளில் வெயில், அதிக கூட்டம் போன்ற சிரமம் தான் இருந்தது என கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial pandian stores actress sheela say about that serial

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com