Pandian Stores Lakshmi amma RE-entry : விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. கூட்டு குடும்பத்தின் நன்மைகள் குறித்த முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த சீரியலில் கடந்த இரு வார எபிசோடுகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் முக்கிய நபராக இருந்த லக்ஷ்மி அம்மா கடந்த வாரம் இறந்துவிட்டார். அன்று முதல் கடந்த வார இறுதிவரை அவரின் இறுச்சடங்கு தொடர்பான எபிசோடுகளே ஒளிபரப்பாகி வந்தது. கண்ணன் கடைசி வரைக்கும் தனது அம்மாவின் முகத்தை பார்க்காமல் போனது, அம்மாவுக்காக கண்ணன் மொட்டை அடித்தது எல்லாமே ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கடந்த வார இறுதியிலே இறுதிச்சடங்கு அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், இன்றுமுதல் புதிய ட்ராக் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் லக்ஷ்மி அம்மா இல்லாத குடும்பம் இனி எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். மேலும் இனிமேல் லக்ஷ்மி அம்மாவை பார்க்க முடியாது என்றும் சில ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஆனால் இன்றைய எபிசோடில் லட்சுமி அம்மாள் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்குள் வருவதாக கூறப்படுகிறது.
அவர் வீட்டிற்குள் வந்து தனத்திடம் மனம்விட்டு சில விஷயங்கள் பேசுகிறார். முதலில் லக்ஷ்மி அம்மாவை பார்த்து அதிர்ந்த தனம் அவரிடம் பேசிய பிறகு அது கனவு என்பதை உணர்கிறார். இந்த ட்ராக் இன்றைய எபிசோட்டில் ஒளிபரப்பாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil