Advertisment

Tamil Serial Rating : கொரோனாவும் இந்த சீரியலும் ஒண்ணு... இப்போதைக்கு முடியாது... ரோஜாவின் பரிதாபம்

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Serial Rating : கொரோனாவும் இந்த சீரியலும் ஒண்ணு... இப்போதைக்கு முடியாது... ரோஜாவின் பரிதாபம்

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்யடின் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நேற்று அவங்க பேசிய வசனத்தை வைத்தே கவனித்தேன் இந்த கதாபாத்திரம் நிறைவடையும் என்று.. என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாவம் லட்சுமி அம்மா அவங்கள இன்னிமே பாண்டியன் ஸ்டோர்ஸ்ல பாக்கவே முடியாம போச்சே என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அடுத்து இந்த அம்மாவின் தங்கையாக மறுபடியும் என்ட்ரி ஆவாங்க யாரும் அழுகாதீங்க... என பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மிஸ் யூ லக்ஷ்மி அம்மா என்று பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆணுக்கு கண்ணீர் வருவது அவ்வளவு எளிதல்ல. மனதை கலங்க வைக்கும் நடிப்பு என சரவணனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர் சரவணன் கேரக்டரில் சித்துவின் எதார்த்தமான நடிப்பு அருமை என்று கூறியுள்ளார். மேலும் சந்தியா அப்படியே பிக் பாஸ் 5 க்கு போய்டு மா என ஒரு ரசிகர் கூறிள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சரவணனின் நடிப்பு அருமை என்றே பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த நாடகத்தில் எப்போவுமே சாமியை விட சாத்தானுக்கு தான் சக்தி.. இறுதி வெற்றி சாத்தானுக்கே.. என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செண்பகம் வந்துட்டாங்க இப்போ வைப்பாங்க நம்ம எல்லோருக்கும் ட்விஸ்ட். நாளைக்கு செண்பகம் அம்மா ரோஜா பக்கத்துல வந்ததும் முடியும் செவ்வாய்க்கிழமை தான் செண்பகம் என்ன சொல்வாங்க என்று தெரியவரும் மற்றொரு ரசிகர் கொரானாவும் இந்த சீரியலும் ஒன்னு..... இப்போதைக்கு ஒழியாது....என கூறியுள்ளார். இப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தியே உடம்ப ரணகலம் ஆக்கிட்டாணுங்க பா... என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். இதுவரை வீட்டில் இருந்த லக்ஷ்மி அம்மா தற்போது இறந்து விடுவதுபோல் காட்சிகள் வருவதே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment