Tamil Serial Raja rani Rating Update : பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பல வழிகளில் விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் சீரியல் மூலம் நாங்களும் வழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்று விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 சீரியல் முயற்சி செய்துள்ளது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீசன் 2. தொடக்கத்தில் இருந்தே சுமாரான வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு முக்கியா காரணம் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலாக காட்சி அமைப்புகள் மற்றும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புகளும்தான்.
சிவகாமி குடும்பத்தின் இரு மருமகள்கள். சந்தியா அர்ச்சனா. இதில் சந்தியா மாமியார் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக நடந்துகொள்கிறாள். ஆனால் அர்ச்சனா பெருமை சேர்க்கும் விதமாக நடிக்கிறாள். இதில் அர்ச்சனாவின் சூட்சமங்களை அவ்வப்போது கண்டுபிடிக்கும் சந்தியா அதை வீட்டில் சொல்லாமல் மறைத்து விடுகிறார் இதனால் மாமியார் சிவகாமி அர்ச்சனாவை நல்லவள் என்று முழுமனதாக நம்புகிறாள்.
இந்த வேளையில் சிவகாமியின் மகள் பார்வதிக்கு திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தை நிறுத்தி பார்வதிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கும் தனது தங்கைக்கும் திருமணம் நடத்தி வைக்க அர்ச்சனா நினைக்கிறாள். இதற்கு முன்பே அர்ச்சனா பார்வதியின் முன்னாள் காதலனை தூண்டிவிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறாள்.
இதை தெரிந்துகொண்டு ஒரு கட்டத்தில் பயந்த பார்வதி இப்போது தைரியமாக முன்னாள் காதலன் விக்கியை எதிர்த்து பேசுகிறார். இதை சற்றும் எதிர்பாராத விக்கி கல்யாணத்தில் தாலி கட்டும்போது விக்கியுடன் பார்வதி இருக்கும் போட்டோக்களை காண்பிக்கிறார். இப்போது அவனை அடிக்கும் பார்வதியின் மாமியார் இது எனக்கு முன்னாடியே தெரியும் என்று சொல்லி ட்விஸ்ட் கொடுகிறார்.
அதன்பிறகு சந்தியா பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விழிப்புணர்வாக பேச இன்றைய ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், சில பாக்யலட்சுமி சீரியலின் பாக்யா கேரக்டரை வைத்து கலாய்த்துள்ளனர். அதில் ஒரு ரசிகர், சந்தியா மேடம்.. அப்டியே அந்த பாக்யாலக்ஷ்மி கோபியையும் கொஞ்சம் கவனிச்சிட்டு வாங்க.. ரொம்ப நாளா பாக்யாவா ஏமாத்திட்டு தப்பிச்சிட்டு இருக்கான்..என்று கூறியுள்ளார்.
மற்றொரு ரசிகர், பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு கதை அமைப்பு. இயக்குநர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் சூப்பர் செம அறை. போட்டோ வைத்துக்கொண்டு என்ன பிளாக் மெயில் செய்யிறான். மாமியார் ஆக வர போற அந்த அம்மாவுக்கு என்னுடைய பாராட்டுக்கள். என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“