Advertisment

கர்ப்பிணி பெண் ரத்தம் கொடுக்கலாமா? விமர்சனத்திற்கு உள்ளான விஜய் டிவி சீரியல்

சிவகாமி குடும்பத்தின் 3-வது மகன் ஆதி ஜெசியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்ட நிலையில். அதற்கு தான் காரணம் இல்லை என்று சொல்லி விடுகிறான்.

author-image
WebDesk
New Update
கர்ப்பிணி பெண் ரத்தம் கொடுக்கலாமா? விமர்சனத்திற்கு உள்ளான விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில். இந்த சீரியிலில் நடித்து வரும் நடிகர் ப்ரமோவை பகிர்ந்து அப்போது நானும் அவுட்டா என்று பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சீரியலுக்கு பெயர் போன விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் ஒரு பெண் திருமணத்திற்கு பின் அந்த கனவை எப்படி நிறைவேற்றிக்கொள்கிறாள் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ரியா சித்து ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் தற்போது ஆதியின் திருமண படலம் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

சிவகாமி குடும்பத்தின் 3-வது மகன் ஆதி ஜெசியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்ட நிலையில். அதற்கு தான் காரணம் இல்லை என்று சொல்லி விடுகிறான். ஆனால் ஜெசியை நம்பும் சந்தியா சரவணன் இருவரும் உண்மையை கண்டுபிடித்து சிவகாமியிடம் சொல்லிவிடுகின்றனர் அதன்பிறகு தற்போது ஆதியின் தவறை புரிந்துகொள்ளும் சிவகாமி ஆதி ஜெசி திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

ஆனால் ஜெசி இந்த வீட்டு மருமகளாக வரவேண்டும் என்றால் மத அடையாளம் இல்லாமல் வரவேண்டும் என்றும், திருமணத்திற்கு பின் அவளது பெற்றோர்கள் இங்கு வர கூடாது என்று சொல்லிவிடுகிறார். இதனால் அதிர்ச்சியாகும் சந்தியா சரவணன் இருவரும் சிவகாமிக்கு புரிய வைக்க முடிவு செய்கின்றனர்

இதனிடையே சரவணனின் அப்பா திடீரென மயக்கமடைந்து விழுந்துவிடுகிறார். அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்தபோது நெகடீவ் பிளட் வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அப்போது ஜெசிக்கு அந்த பிளட் குருப்தான் என்று சொல்லி அவளை பிளட் கொடுக்க வைத்துள்ளனர். அப்போது சந்தியா அவரசம்னு சொல்லும்போது மதம் குறுக்க வரல ஆன திருமணம் சொல்லும்போது மதம் எப்படி அத்தை குறுக்க வருது என்று கேட்கிறார்

இதனிடையே தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அப்பா கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சைவம் ரவி, அப்படினா நானும் அவுட்டா என்று பதிவிட்டுள்ளார். இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் தற்போது ஜெசி கர்ப்பமாக உள்ள நிலையிலும் வருங்கால மாமனாருக்கு பிளட் கொடுத்துள்ள நிலையில். கர்ப்பிணி பெண் பிளட் கொடுக்கலாமா என்று ரசிகர்கள் கேள்வி எடுப்பி வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Raja Rani 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment