Tamil Serial Baakiyalakshmi Rating Update : கொஞ்ச நாளா இல்ல ரொம்ப நாளாவே கோபி சரியில்லை தான் அது உங்களுக்கு இப்போதான் புரியுதா என்று கேட்க தோன்றுகிறது பாக்யலட்சுமி சீரியல் ப்ரமோ.
விஜய் டிவியின் முக்கிய சீரயல்களில் ஒன்று பாக்யலட்சுமி. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மனைவி பாக்யாவுக்கு தெரியாமல், முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள நினைக்கும் கோபி எப்போது மாட்டிக்கொள்வார் என்ற எதிர்பார்ப்புதான்.
ஆனால் இதை எதிர்பார்த்து பார்த்து கண்கள் பூத்து போனதுதான் மிச்சம். கோபி மாட்டுவது போல் பலமுறை ப்ரமோ காட்டினாலும், எபிசோட்டில் அதற்கான சுவடே இல்லை. இதனால் கடுப்பான ரசிகர்கள் சீரியலை ரொம்பவே கலாய்க்க தொடங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல், கணவனை நம்பலம் ஆனால் கண்மூடித்தனமாக நம்ப கூடாது என்பதற்கு இந்த பாக்ய கேரக்டர் பெரிய உதாரணம்.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் பலதுறைகளில் சாதித்து வரும் இந்த காலத்தில், கணவன் தப்பு செய்கிறார் என்று தெரிந்தும் அவரை கேள்வி கேட்க பயப்படுவது, பெற்ற மகளே அப்பாவை இன்னொரு திருமணம் செய்துகொள்ள சொல்வது, என பல காட்சிகள் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தினாலும், கோபியின் நடிப்பு பாராட்டை பெறுவது தவறுவதில்லை.
அந்த வகையில் தனக்கு தனி ரூம் வேண்டும் என்று இனியா கேட்டுக்கொண்டதால், பாக்யா இப்போது கோபியின் ரூமில் தங்கிக்கொள்கிறார். இதில் தற்போது பாக்யா தூங்கிவிட்டதாக நினைத்து கோபி வெளியில் செல்ல முயற்சிக்க டக்குனு முழிக்கும் பாக்யா எங்கே போறீ்ங்க என்று கேட்கிறாள்.
இதனால் அதிர்ச்சியாகும் கோபி எதையோ சொல்லி சமாளிக்க அந்த நேரம் பார்த்து ராதிகா போன் செய்கிறாள் இதனால் மேலும் ஷாக் ஆகும் கோபி அந்த காலை கட் செய்துவிடுகிறார். ஆனால் ராதிகா திரும்ப திரும்ப கால் செய்ய பாக்யா இந்த நேரத்தில் யார் கால் பண்றாங்க உங்களுக்கு என்று கேட்கிறாள்.
அதற்கு கோபி என் க்ளோஸ் ப்ரண்டு என்று சொல்கிறான் ஆனாலும் ராதிகா திரும்ப திரும்ப கால் பண்ண கோபி போனை சுவிட்ப் ஆப் செய்துவிடுகிறார். இதனால் அதிர்ச்சியாகும் ராதிகா இவர் கொஞ்ச நாளாவே சரியில்லை என்று சொல்கிறாள். இதைபார்த்த ரசிகர் ஒருவர் கோபி வில்லன் நடிப்பு நடித்தாலும் எல்லோரும் ரசிக்கும்படி நடிக்கிறார் அது தான் அவருடைய வெற்றி என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“