Advertisment

Tamil Serial Rating : '' இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'' : ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட பாரதி

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : '' இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'' : ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட பாரதி

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டார்ஸ் :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இன்னும் எத்தனை நாட்களுக்குதான் இந்த சீன் ஓட்டுவீங்க என்று பதிவிட்டுள்ளனர். மற்றொரு ரசிகர் நீயல்லாம் ஒரு ஆளு எனறு பதிவிட்டுள்ளார். சூப்பர் தல என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். இவங்க ரெண்டுபேரையும் வீட்ல சேக்காதீங்க சோத்துக்கு கஷ்டப்படட்டும் என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் இந்த தாளி கட்ர சீன் அடுத்த திங்கள் தான் கட்டுவான் என்று பதிவிட்டுள்ளார்.  பாண்டியன் ஸ்டோர்ஸ் இனி கண்ணனை சேர்க்காதீர்கள் என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். சீரியலா இருந்தாலும் ஒரு ஞாயம் வேண்டாமாடா என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் எழிலின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இதில் ஒரு சில ரசிகர் எழில் எப்போதும் அந்த வீட்டிலேயே சுத்திக்கிட்டு இருக்காரே என்று பதிவிட்டுள்ளனர். தொடர்ந்து எழிலின் அண்ணன் செழியன் குறித்து விமர்சனஙகளை பதிவிட்டு வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த சீனுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் பாரதி கண்ணம்மா ஈஸ் பேக் டிஆர்பி எகிற போகுது என்று பதிவிட்டுள்ளார்.  மற்றொரு பார்க்கவே செம்மயா இருக்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீனுக்காக காத்திருப்பதாகவே பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2:

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சூப்பர் என்றே கமெண்ட் கொடுத்துள்ளனர். மேலும் சிவகாமி இப்பவாது சந்தியாவை புரிந்துகொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் முழுவதும சரவணன் சந்தியா இருவரும் புரிதல் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது இந்த ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் ஒரு வகை  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோஜா :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நான் நினைத்தது போலவே அர்ஜுன் ஆதாரம் இல்லாம கோர்ட்க்கு வந்து இருக்கமாடடார் புலி நீ ஜட்ஜ் கிட்ட வழிஞ்சது பாக்க கேவலமா இருந்தது என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அன்ன பூரணிக்கும். டைகரருக்கும். அர்ஜுன். கொடுத்த அதிர்ச்சி. வைத்தியம் சூப்பர் என பதிவிட்டுள்ளார். முடிய வேண்டிய சீரியலை ஏன்தான் இப்படி இழுத்துக்கொண்டு போறீங்களோ என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ஜூனுக்கு பாராட்டையே தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாரதி கண்ணம்மா மற்றும் ரோஜா சீரியல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்பாடுத்தியுள்ளது என்று கூறலாம். பாரதி கண்ணம்மாவில் பழைய நினைவுகள், ரோஜாவில் அர்ஜூனிடம் உள்ள சாட்சி இது இரண்டுமே இந்த சீரியல்களின் எதிர்பார்ப்பிற்கு காரணமாக உள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment