Advertisment

கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் தவிர வேறு எதும் இல்லையா? ரோஜா பரிதாபம்

Tamil Serial Update : கோர்ட் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் எடுக்கவே இங்க நேரம் பத்தல இதுல எங்க ரொமான்ஸ் கட்சிகள் எடுப்பது என்பது இயக்குநரின் மைண்ட் வாய்ஸ்

author-image
D. Elayaraja
New Update
கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் தவிர வேறு எதும் இல்லையா? ரோஜா பரிதாபம்

Tamil Serial Rating Update : என்னப்பா இப்படி பண்றீங்களே... அனு இந்த வீட்டு பொண்ணு இல்லனு நிரூபிச்சிட்டா எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சா இப்போ அனுவை வக்கீலா மாத்தி கதையை எங்கயோ கொண்டு பொறீங்களே என்று புலம்ப வைத்த சீரியல்தான் ரோஜா.

Advertisment

சன்டிவியின் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசகர்கள் மத்தியில் நலல வரவேற்பை பெற்று வரும் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. பொய் சொல்லி தனது வீட்டிற்கு வந்த பெண் தனது பேத்தி இல்லை என்று அன்னப்பூரணிக்கு தெரிந்து அனுவை வீட்டை விட்டு வெளியேற்விட்டனர். ஆனால் அவள் இப்போது அர்ஜூனின் எதிர் தரப்பு வக்கீலிடம் ஜூனியரக சேர்ந்துகொண்டார்.

இப்போது அர்ஜூன் குடும்பத்தினர் அனுவுடன் மோதலை விட்டு விட்டு எதிர்தரப்பு வக்கீலுடன் கோர்ட்டில் வாதத்தினால் மோதிக்கொள்கின்றனர். இதில் அந்த வக்கீல் ஒவ்வொரு பிரச்சனையாக கிளப்ப அந்த பிரச்சினைக்கு தீர்வு தேடி அலைவதே அர்ஜுனின் வேலையாக உள்ளது. வந்த காட்சிகளே மீண்டும் வருவதால், இந்த சீரியல் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் அனு வில்லியாக இருந்த போது அவள செய்யும் வில்லத்தனத்திற்கும், அதற்கு அர்ஜூன் கொடுக்கும் பதிலடியும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது இரு வக்கீல்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் மோதலாக இருப்பதால், ஆக்ஷன் மற்றும் புத்தி கூர்மையுள்ள காட்சிகளுக்கு பதிலாக கோர்ட்டி வாதத்திலேயே எபிசோடுகள கடந்து விடுகினறனர்.

இதில் அர்ஜூன் ரோஜா இவரும் தங்கள் வீட்டிற்கு அறிமுகம் இல்லாத பலரை அழைத்து வந்த தங்க வைப்பதும், அவர்களுக்காக வாதாடுவதும் நல்ல நடவடிக்கைதான் என்றாலும் கூடஇதையே பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி அடுத்து என்ன என்று யோசிங்க டைரக்டர் சார் என்று சொல்ல தோனுகிறது உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அனு வில்லியாக இருக்கும்போது கூட இவ்வளவு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் காட்சிகள் இந்த சீரியலில் இருந்திருக்காது.

ஆனால் இப்போது சீரியல் முழுவதும் ஒன்று கோர்ட் இல்ல போலீஸ் ஸ்டேஷன் நடுவில் கொஞ்சம் அர்ஜூனின் வீடு என்றுதான் செல்கிறது. இதனால் பார்த்த காட்சிகளையே மறுபடியும் பார்ப்பது போலத்தான் தோன்றுகிறது. இந்த காட்சிகள் காரணமாக அர்ஜூன் ரோஜா இடையே நடக்கும் ரொமான்ஸ் கட்சிகளுக்கும் சற்று கட்டையை போட்டுள்ளார் டைரக்டர்.

கோர்ட் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் எடுக்கவே இங்க நேரம் பத்தல இதுல எங்க ரொமான்ஸ் கட்சிகள் எடுப்பது என்பது இயக்குநரின் மைண்ட் வாய்ஸ் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகினறனர். ஆனாலும் எந்த காட்சி எப்படி வந்தாலும் பார்ப்போம் என்று சொல்லி வரும் ரோஜாவின் தீவிர ரசிகர்களுக்கு இந்த சீரியல் நிச்சயம் கவரும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Suntv Serial Roja Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment