Advertisment

Tamil Serial Rating : இவ்வளவு ஒரிஜினலா இருக்கணும்னு அவசியம் இல்ல... அந்த அம்மா பாவம்...

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : இவ்வளவு ஒரிஜினலா இருக்கணும்னு அவசியம் இல்ல... அந்த அம்மா பாவம்...

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நாடகம் மாதிரியே இல்ல நிஜம் மாதிரி இருக்குய என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இவங்க பன்ற காமெண்ட் பாத்தா அந்த அம்மா வ நேர்ல பாத்த கூட நீங்க இன்னும் சாகலயானு கேட்டாலும் கேட்பாங்க என்று கூறியுள்ளார். லக்ஷ்மி அம்மாவுக்கு சாவு பயத்தை காட்டீங்க சீரியலா இருந்தாலும் இது டூ மச் என்று பதிவிட்டுள்ளார்.  மற்றொரு ரசிகர் மீனா நல்ல கேரக்டர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இவ்வளவு ஒரிஜினலா இருக்கனும்னு அவசியம் இல்ல அந்த அம்மா பாவம் என்றும் கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனங்களையே பதிவிட்டுள்ளனர். சடங்கு எல்லாம் நிஜ வாழ்கைக்கு ஏற்றது போல இருக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு என ஒருவர் கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் டைரக்டர் சார் நீங்க வாழ்கையில் நல்லா வரனும் என்று நினைத்தால் கண்ணம்மாவை வாழவிடுங்கள். எப்போ பார்த்தாலும் கண்ணம்மாவை அழவச்சிட்டே இருக்கீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எவ்ளோதான் கழுவி கழுவி ஊற்றினாலும் டைரக்டர் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கபோறதும் இல்ல சீரியலை முடிக்க போறதும் இல்ல என்று கூறியுள்ளார்.  உண்மையை கண்டுபிடிக்க முடியல இது இவருக்கு சிக்கன் கேக்குது என்று மற்றொரு ரசிகர் பாரதியை விமர்சித்துள்ளார். மற்றொரு ரசிகர் உண்மை தெரிந்தவுடன் பாரதியை பார்க்க வேண்டும் பொண்ணுங்கனா அவ்ளோ கேவலமா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாக்யா அம்மா வருங்கால மருமகளை பார்க்க வந்துருக்காங்களாஎன்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பரவாயில்லை அமிர்தாவின் மாமனார் மாமியார் இருவரும் நல்ல கேரக்டரா மாறிட்டாங்களே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீசன் நல்லாருக்கு என்று பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜாவும் சென்பகம்மும் ஒன்று சேர்ந்ததில் எல்லாம் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த கதையை பார்க்கவும் முடியலை பாக்கமா இருக்கவும் முடியலை என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் சாக்ஸி செண்பகத்தை நடிப்பதற்கு ரோஜா வீட்டுக்கு அனுப்புன விஷயம் அர்ஜுனுக்கு தெரியணும் என பதிவிட்டுள்ளார். செண்பகம் தான் மகள் ரோஜா என்று சொன்னாலும் அன்னப்பூரணி இதற்கு சம்மதம் சொல்லது என்று பதிவிட்டுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் சீக்கிரம் உண்மை கண்டுபிடிக்கனும் என்றே பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். அம்மா மரணத்திற்கு கண்ணள் வருவான என்ற எதிர்பார்ப்பே அதற்கு முக்கிய காரணம் என்று கூறலாம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment