Advertisment

Tamil Serial Rating : என் தம்பிகள் தான் என் உலகம் சொன்ன மூர்த்தி என்ன செய்வாரோ... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரிதாபம்

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : என் தம்பிகள் தான் என் உலகம் சொன்ன மூர்த்தி என்ன செய்வாரோ... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரிதாபம்

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆமா வீடு பாத்து கொடுத்து , மளிகை சாமான் வீட்டுக்கு அனுப்பி வைத்து , வேலை வாங்கி கொடுத்து எல்லாம் பண்ணுவாங்களாம் , ஆனா கண்ணன வீட்டில மட்டும் சேத்துக்க மாட்டாங்களாம் என கூறியள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணன் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு இந்த ஒற்றுமையான அண்ணன் தம்பிகளை பிரிக்க நினைக்கும் மற்ற வெளி சொந்தங்கள்!! இப்ப என் தம்பிகள் தான் என் உலகம் சொன்ன மூர்த்தி என்ன செய்வாரோ!! போலி உறவுகள் உண்மையான உறவுகளை இப்படித்தான் பிரிக்கப் பார்க்கும்... என கூறிள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதி பைத்தியமா மாறிடுவான் கண்ணம்மா அவன பாத்துக்குவா இதான நடக்க போகுது அட போங்கப்பா என்று கூறியுள்ளார். ரொம்ப இழுவையா போய்கிட்டு இருக்கு லாஸ்ட்டா மொக்கயாக முடிக்க போறீங்க என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் ரொம்ப போர் அடிப்பதாகவே பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர் பாரதியை விட பெட்டரான ஆள் பின்னாடி வெண்பா சுற்றுவது போல் கொண்டு போங்க கதையை என கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஏன் எப்படி போனாலும் பாக்யா அம்மாவுக்கு எதிராவே இருக்கீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க நீங்க தைரியமா பண்ணுங்க பாத்துக்கலாம் என்று கூறியள்ளனர். மேலும் ஒரு ரசிகர்எப்போதான் பாக்யாவை தைரியமான பொண்ணா காட்டூவீங்க ரொம்ப போர் அடிக்குது என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பெண்களை சீரியலில் தைரியமாக காட்டுங்கள் ஊக்கப்படுத்துங்கள் என்றே பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ச்சனா எவ்ளோ பெரிய தப்பு பண்ணாலும் உங்களுக்கு சாதாரணம் தான் போல என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாட்டு எல்லாம் பலமா இருக்கு அப்போ அடுத்து ஏதாவது சண்டை இருக்கா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும்  இப்படியே அர்ச்சனாவுக்கு இடம் கொடுங்க கடைசியில அனுபவிப்பீங்க என்று கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பாத்த ரசிகர் ஒருவர் இந்த கதையில் அணு போலி என்பது செண்பகத்துக்கு நல்லாவே தெரிந்து விட்டது.கதையில் செண்பகத்துக்கு பழைய நினைவுகள் திரும்பி வர நீண்ட நாட்கள் ஆக்கிடுவாங்க என கூறியுள்ளா. மற்றொரு ரசிகர் செண்பகத்தின். தர்மசங்கடமான. நிலமை பாவம். சீக்கிரமே பழைய நினைவுகள் வந்தால் ‌ நல்லா இருக்குமே என கூறியுள்ளார். மாணிக்கத்தை உங்களை யாருனே தெரியலைன்னு நல்லா அலைய வைக்கனும் செண்பகம் அம்மா என கூறியுளய்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செண்பகத்திற்கு பழைய நினைவுகள் வரவேண்டும் என்றே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். வெண்பாவிடம் மாட்டிக்கொண்ட கண்ணம்மா அடுத்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும்என கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment