Advertisment

Tami Serial Rating : கொரோனா ஒரு பக்கம்... அத விட மோசமா நீங்க பண்ணுறீங்க... ஏன் ரோஜா இப்படி?

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tami Serial Rating : கொரோனா ஒரு பக்கம்... அத விட மோசமா நீங்க பண்ணுறீங்க... ஏன் ரோஜா இப்படி?

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த ஜனார்த்தனுக்கு வேற வேலையே இல்ல எப்ப பார்த்தாலும் அடுத்தவங்களா குறை சொல்றதே வேலை என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நல்லா கேளுங்க வேலை இல்லாம கல்யாணம் பண்ணா இப்படித்தான இருக்கும்னு புரியவைங்க என்று கூறியுள்ளார்.  வீட்டில் இருப்பவர்களை மதிக்காமல் இப்படி செய்தால் அடுத்தவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் நடுநிலையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரேகா மேடம் நீங்க எங்க இங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எப்படியும் ஜெயிக்கப்போறது பாக்யா அம்மாதா அதுக்கு ஏன் எவ்வளே பில்ட்அப் கொடுக்குறீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு  ரசிகர் கலந்துகிட்டா போதும் என்று பாக்யாவை கூட்டி வந்து இப்போ பரிசு வாங்க சொல்லுது இனியா என்று கூறியுள்ளார்.  மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யாவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர், பாரதிக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிந்ததும் கண்ணம்மா வின் சந்தோஷம் அருமை..என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணம்மாவுக்கு கலைமாமணி அவார்ட் கொடுக்கலாம்.. ஆல் ஆக்ட்டிங் சூப்பர் மேட்சிங் என பதிவிட்டுள்ளார். எல்லாமே சரிதான்..மறுபடியும் 8 ஆண்டுகளுக்கு பிறகுன்னு வந்தாலும் வரும் என ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். இப்ப எல்லாம் பாரதி கண்ணம்மா நல்லாத்தான் போகுது... என்று கூறியுள்ளார்

ராஜாராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சிவகாமிக்கு எப்போவுமே சந்தியா ஆகாத மருமகள் தான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன டைரக்டர் சார் எப்போர் பார்த்தாலும் எதாவது ஒரு சண்டைய இழுத்து விடுறீங்க என்று கேட்டுள்ளார். இந்த சீரியல் ஒருநாளும் நல்லா போனதா சரித்திரமே இல்லை என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். எல்லாம் பண்றது அர்ச்சனா ஆனா திட்டு வாங்குறது சந்தியா எப்போதான் இத முடிபீங்க என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இது மாதிரி பார்த்து பார்த்து போர்டிச்சுப் போச்சு பா என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்னடா திடீர்னு செண்பகம் ஹல்கா மாறீட்டாங்க என்று கூறியுள்ளார். கொரோனா ஒரு பக்கம் அத விட மோசமா நீங்க பண்ணுறீங்க என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். செண்பகம் உயிரோட இருக்கான்னு தெரிஞ்சா உண்மையிலேயே கோபப்படுறது டைகர் மாணிக்கம் தான் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது இன்று பாக்யலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். வீட்டில் யாரும் மதிக்காத பாக்யா வெளியில் நல்ல பெயர் வாங்குவது அதற்கு காரணம். இதேபோல் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு இதைவிட அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை கண்ணம்மாவை வெறுப்பேற்றிய வெண்பா தற்போது கண்ணம்மாவின் நடவடிக்கையை பார்த்து கடுப்பாகும் நிகழ்விற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment