Advertisment

Tamil Serial Rating : டைரக்டர் சார் எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.... இது எங்க பாட்டி காலத்துல இருந்து வர சீன்...

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : டைரக்டர் சார் எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.... இது எங்க பாட்டி காலத்துல இருந்து வர சீன்...

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சூர்ய வம்சம் ஆரம்பம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்கு கண்ணன் வீட்டுல சேர்த்து இருக்கலாம் டா என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஹலோ டைரக்டர் சார்......கதிர் கலெக்டர் ஆகுற கதை எப்போ வரும் என கேட்டுள்ளார். இந்த பொருட்களையெல்லாம் வைத்து கண்ணன் ஸ்டோர்ஸ் ஆரம்பிச்சா நல்லா இருக்கும் என ஒரு ரசிகர் கூறியுள்ளார். அப்போ என் பேச்சுக்கு மரியாதை இல்லை இந்த வீட்டுல நடத்துங்க டா என மூர்த்தி நினைப்பது போல ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் விமர்சனம் செய்வது போலவே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். டைரக்டர் சார் எப்படி இப்படிலா யோசிக்கிறீங்க.... இது எங்க பாட்டி காலத்துல இருந்து வர சீன்... என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இத மாதிரி ஆள பாத்ததே இல்ல சாமி என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர், டைரக்டர் சார் தயவு செய்து நல்ல ஸ்கிரிப்டா எடுங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் குடும்ப பெண்கள் பலரின் வாழ்க்கை இப்படித்தான் செல்கிறது என்பதை சொல்லும் விதமாகவே கருத்தக்களை பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஏதோ இப்பவாது ஒரு நல்ல சீன் போட்டீங்கள்ளே என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அவ்ளோதான் இதற்கு மேல் வெறும் அழுகாட்சி தானா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சிக்கிரமா உண்மையை தெரிய வைங்கப்பா என்று சொல்லும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எல்லா குடும்பத்துலயும் இப்படி ஒரு கேரக்டர் சுத்திக்கிட்டுதான் இருக்கு  என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருத்தருக்கு கெட்டபேர் வாங்கி கொடுக்க என்னெல்லாம் பண்றாங்க பாருங்க என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லா சீரியலும் ஒரு மாதிரிதா இருக்கு இதுல என்ன புதுமை கதைய மாத்துங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். மேலும பலரம் அர்ச்சனாவுக்கு எதிராகவும், சந்தியாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சீரியல் ஹிட் ஆனதுக்கு காரணமே செந்தில் அண்ணனின் அர்புதமான நடிப்புதான் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இருவர் நமக்இருவர்... சீக்கிரம் இருவரும் ஒன்னு சேரனும்.... அம்மா பாசம் சீக்கிரம் கிடைக்கணும்...என பதிவிட்டுள்ளார். நான் பார்க்கும் ஒரே ஒரு நாடகம் இது மட்டும்தான். என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்று கூறலாம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serials
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment