Advertisment

Tamil Serial Rating : வில்லியா இருந்த அஞ்சலி வில்லத்தனமாகவே வெண்பா மூக்கை உடைத்தது சூப்பர்

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : வில்லியா இருந்த அஞ்சலி வில்லத்தனமாகவே வெண்பா மூக்கை உடைத்தது சூப்பர்

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சீரியல் ரொம்ப போர் அடிக்குது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மிஸ்யூ சித்ரா என்று பதிவிட்டுள்ளர். மேலும் ஒரு ரசிகர் சூப்பர் சீன் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மீண்டும் ரொமான்ஸா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கதிர் முல்லை ரசிகர்கள் இந்த சீனுக்காக காத்திருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வரலாற்றிலேயே இன்றைக்கு தான் அனைத்து பிரமோ நன்றாக இருந்தது.... என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எப்படின்னு கேட்டா எப்படி.... அதை டைரக்டர் கிட்ட தான் கேட்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் போனவாரம் லக்ஷ்மி யோட அம்மா யாரு இந்த வாரம் ஹேமாவோட அம்மா யாரு டைரக்டர் மைண்ட் வாய்ஸ் எப்படி எடுத்தாலும் சீரியல் பாக்குறீங்களே நீங்கல்லாம் யாரு என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வில்லியா இருந்த அஞ்சலி வில்லிதனமாகவே வென்பா மூக்கை உடைத்தது சூப்பர்.. என கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சூப்பர் டான்ஸ் என்றும்பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாக்ய அம்மாவுக்கு இப்படி ஒரு திறமையா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் என்ன கோபி திட்டுவீங்கனு பார்த்தா ரசிக்கிறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பரவால்லை கோபி இந்த டான்ஸ பாத்துட்டு கோப்ப்படாம இருக்காரு என்று கருத்துக்களை கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அப்பாடா இப்பயாவது சரவணன் கேட்டாரே இன்னு ரெண்டு வாரம் ஜவ்வா இழுக்கமா என கேட்டுள்ளார். இனியாவது சரவணனுக்கு உண்மை தெரிஞ்சு பழைய மாதிரி சரவணன் மாருனா தான் இன்னும் சூப்பரா இருக்கும் என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். பல ரசிகர்கள் சந்தியா என் பையன ஏமாத்திட்டா என்று சொல்வதாகவே கமெண்ட் செய்துள்ளனர். ஒரு சில ரசிகர்கள் சரணவன் பழையபடி மாற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வெளங்கும் எப்படியும் வழக்கம் போல மொக்கை ஆக தான் போகுது, என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரோஜா பாவம் சீக்கிரம் அவங்க அம்மா செண்பகத்தை வீட்டுக்கு வர வைக்க கதை கொடுங்கள் அணுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும் என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு ஏமாற்றுவதே இந்த சீரியலின் பழக்கம் என்று கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். வெண்பாவுக்கு பாரதிக்கும் திருமணம் ஆகவில்லை என்று தெரிந்துகொண்ட கண்ணம்மாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம் மற்றபடி அனைத்து சீரியல் அந்ந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment