Advertisment

Tamil Serial Rating : டைரக்டர் ஜவ்வு இழுப்பதில் பிஎச்டி வாங்கி இருப்பார் போல.. நம்ம பொறுமையை நல்ல சோதிக்கிறாரு

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : டைரக்டர் ஜவ்வு இழுப்பதில் பிஎச்டி வாங்கி இருப்பார் போல.. நம்ம பொறுமையை நல்ல சோதிக்கிறாரு

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த பரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவே பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர் இப்போ எல்லா பழியையும் தூக்கி கண்ணன் மேல தான போடுவீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணன எம்.மகன் வடிவேலு மாதிரி ஆக்கீட்டீங்களே என்று கூறியுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் லக்ஷ்மி அம்மா மரணத்துக்கு கண்ணள்தான் காரணம் என்று பழி வரும் என்பது போல கருத்துக்களை பதிவிட்டுள்ளனா.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் லக்ஷ்மி நீ தெரியா சொன்னாலும் உண்மை அதுதான் சூப்பர் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்பவாது உண்மையை சொல்லுங்க அகில் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் லக்ஷ்மி தெரியுரது கூட கண்ணம்மா உனக்கு தெரியலையே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த உண்மை எப்போதூன் தெரியவரும், சீக்கிரமா தெரியப்படுத்துங்கள் என்று கூறியுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சரிய சொன்னீங்க பாக்யாஅம்மா நீங்க கூட்டிக்கிட்டு போய்ட்டு வாங்க... செழியன வெளியிலே உட்கார வைங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதுதான் ஒரு நல்ல மாமியாருக்கு அடையாளம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செழியன் மாதிரிவில் ஒவ்வொரு வீட்லயும் ஒரு பையன் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தும், செழியனை விமர்சித்தும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இருக்கும்போது திட்டிக்கொண்டே இருப்பர் அவர் போனவுடன் கவலைப்படுவது இதுதான் தமிழ் சீரியல் சினிமாவின் எழுதப்படாத விதி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சிவகாமி ஏன் இப்படி நடிக்கிறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சந்தியாவுக்கு ஆதரவாகவே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நாளைக்கு சென்பகம் கோவில் வாசலில் நின்று கொண்டு இருந்தாள் எபிசோட் முடியும் மறுநாள் ரோஜா மயக்கம் போட்டு விழுந்து சரியும் போது எபிசோட் முடியும் ஐயோ எங்களுக்கு மிகவும் கடுப்பாக இருக்கு என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜூன் சார் இன்னும் இரண்டு வாரம் மயக்கத்துல இருப்பார் என கூறியுள்ளார். டைரக்டர் ஜவ்வு இழுப்பதில் பிஎச்டி வாங்கி இருப்பார் போல.. நம்ம பொறுமையை நல்ல சோதிக்கிறாரு என கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். லக்ஷ்மியே ஹேமாவை பார்த்து நாங்க ட்வின்ஸ் மாதிரி இருக்கோம் என்று கூறியுள்ளதே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment