Advertisment

Tamil Serial Rating : மீண்டும் பூஜையா? என்னயா கதை ஜவ்வு மாறி போகுது 2021 முடிந்துவிடும் போல... ரோஜா பரிதாபம்

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : மீண்டும் பூஜையா? என்னயா கதை ஜவ்வு மாறி போகுது 2021 முடிந்துவிடும் போல... ரோஜா பரிதாபம்

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணன் பண்ணது தப்புதான ஆனா அதுக்காக இவ்ளோ பெரிய தண்டனை கூடாது என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இனி மூர்த்தியே நினைத்தாலும் கண்ணன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் சேரமாட்டான் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்போதான் இவனுக்கு கோபம் வருது போல என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் ஒரு சிலர் கண்ணன் பாவம் என்ற மற்றும் சிலர் எம்டன் மகன் வடிவேலு என்று பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதி இதை அப்போவே யோசித்து இருக்கலாம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சூப்பர் சீன் வெயிட்டிங் என்றும் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வீட்டில் இருக்க எல்லாரும் சொன்னாங்க அப்போலாம் யோசிக்காத பாரதி யாரோ ஒரு பொண்ணு சொன்னானு இப்படி யோசிக்கிறாரே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதி இப்பவாது திருந்தட்டும் என்றும் இந்த சந்தரப்பத்தில் வெண்பா குட்டையை குழப்பாமல் இருந்தால் ஓகேதான் என்றும் கூறியுள்ளனர்.

பாக்கியலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த வீட்ல எழில் மட்டும்தான் சரியா இருக்கான் என்று கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் பல வீடுகளின் அம்மாகளின் பேச்சை யாரும் மதிப்பதில்லை என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் குடும்ப பெண்களின் வாழ்க்கையை சொல்வதாக பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இனி ஒரு ரொமான்ஸ்தான் என்று கூறியள்ளார். மற்றொரு ரசிகர் எலி தான ஓடுதுனு சொன்னாங்க அது ஏன் இப்படி பண்றீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இவ்வளவு நாள்அழுகாட்சியாக இருந்த சீரியல் இப்பதான் நல்லா இருக்கு என்று பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ஜூனின் ஆட்டம் ஆரம்பம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அனுவின் திட்டம் பலிக்க கூடாது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் மீண்டும் பூஜையா? என்னயா கதை ஜவ்வு மாரி போகுது 2021 முடுச்சுதுஎன கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ரோஜா தான் அந்த ஹோமக்குண்டத்தில் உட்கார வேண்டும் என பதிவிட்டுள்ளார். அர்ஜுன் அனு உட்கார்ந்த இருக்கின்ற நாற்காலியில் பசை தடவிட்டான் போல அனுவலா எழுந்திருக்க முடியல என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அனுவின் திட்டம் பலிக்க கூடாது என்று பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதிகண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். இதற்கு முக்கிய காரணம் பாரதி தான் தப்பு செய்துவிட்டோமோ என்று யோசிப்பது தான். ரோஜா சீரியலுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். மற்ற சீரியல்கள் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment