scorecardresearch

Tamil Serial Rating : இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி டைரக்டர் சார்? ரோஜாவுக்கு செக்

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஒருவழியா தனத்துக்கு குழந்தை பிறக்க பிறந்துவிட்டது இதுல எதும் ட்விட்ஸ் வச்சிடாதீங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பரவாயில்லை கடைசியில்  கண்ணன் வந்துதான் தனத்துக்கு உதவனும்னு டைரக்டர் எழுதி வச்சிருக்காரு என்று கூறியுள்ளார் மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணனை இனிமேலாவது வீட்டில் சேர்த்துக்கொள்வீர்களாக என்று கேட்டுள்ளனர். மேலும் ஒரு ரசிகர் இப்போ சீரியல் முடிய போகுதுனு நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சூப்பர் என்று கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கனவுதான் இருந்தாலும் வெண்பா பயப்படறது நல்லாருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செத்துப்போனாதான் ஆவியா வருவாங்க என்ன கண்ணம்மா உயிரோட இருக்கும்போதே ஆவி மாதிரி வந்துருக்காங்க என்று பதிவிட்டுள்ளார் மற்றொரு ரசிகர் இதுக்கெல்லம் வெண்பா பயப்படற ஆள் இல்லையே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சூப்பர் சீன் கன்டினியூ பண்ணுங்க என்று கூறியுள்ளனர்.

பாக்ய லட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்போ வந்து சாரி கேக்குரியே செழியா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீரியலும் ராஜா ராணி சீரியலும் ஒன்று வீட்ல எது நடந்தாலும் சந்தியாவும் பாக்யாவும்தான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் விட்டுட்டு போ ஜெனி அப்போதான் இவனுக்கு புத்தி வரும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பொண்டாட்டி மேல பெரிய அக்கரை இருக்க மாதிரி காமிச்சிக்கிறான் பாரு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செழியனை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாஸ்டிவாக சீரியலை கொண்டு போங்கள் அண்ணா பூரணி வாயை அடையுங்கள் அப்பதான் டி ஆர் பி வரும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எனக்கு தெரியும் இந்த ஆக்ஸிடன்ல ல செண்பகம் அம்மாவுக்கு பழைய ஞாபகங்கள் வரும் அதுதானே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வேறே கதையே இல்ல போல. எப்ப பாத்தாலும் அனு, சாக்க்ஷியோட சூழ்ச்சி மட்டும்தான் ஜெயிக்கும் போல. போங்கப்பா சுத்த போர், என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீரியலை பாசிட்டீவா கொண்டுபோகவே மாட்டீங்களாக என்று கேட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். தனத்திற்கு குழந்தை பிறக்க இருப்பதே இதற்கு முக்கிய காரணம். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with promo video

Best of Express