Advertisment

Tamil Serial Rating : பன்ச் டயலாக் பேச வந்த கண்ணம்மாவ இப்படி நோஸ் கட் பன்னிட்டியே பாரதி...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : பன்ச் டயலாக் பேச வந்த கண்ணம்மாவ இப்படி நோஸ் கட் பன்னிட்டியே பாரதி...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா ~ சுயமரியாதை சிங்கம்  நமக்கு அது இல்லாததால் தான் இன்னும் இந்த சீரியல் பார்த்துக்கிட்டு இருக்கோம் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பிரிஞ்சாவது தொலைங்கடா டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க மாட்டிங்க, என்று கூறியு்ளளார். தயவு செஞ்சு இந்த சீரியல்-ல முடிசிருங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பன்ச் டயலாக் பேச வந்த கண்ணம்மா வ இப்டி நோஸ் கட் பன்னிட்டியே பாரதி என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படி ஒரு ப்ரமோவை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வெளியில இருக்க கோபத்த வீட்லதான் காட்டுவாங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எல்லாருமே பாக்யகிட்ட போங்க அவங்கதான் ஏமார்ந்த ஆளு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் குடும்பத்தில் என்ன குழப்பம் நடந்தாலும் அதற்கு பாக்யாதான் காரணம் என்று என்று சொல்லுங்கள் ராஜா ராணி 2 சீரியல் மாதிரி என்று கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜாவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது ‌போல ம்ம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வாவ் நாளைக்கு அர்ஜுன் ரோஜா மற்றும் அஸ்வின் பூஜா கல்யாணமா என்று கூறியுள்ளார். இந்த நேரம் பார்த்து கல்பனா இல்லையே எவ்வளவு மிஸ்பண்ணுறோம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த திருமண விழாவில் கண்டிப்பா. கல்பனாம்மா இருந்தால் தான் நல்லாவே இருக்கும் மிஸ் பண்ணாதிங்க ப்ளீஸ் என்று கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மீனாவுக்கு வில்லனே ஜீவாதான் என் கூறியுளளார். மற்றொரு ரசிகர்  மீனா நடிப்பு அபாரம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் குடுப்பத்துடன் சுற்றுலா போய்ட்டு வாங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இங்க நடக்குறது ஜனார்த்தனனுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியலையே என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.

இந்த கருத்து்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். பாரதியும் கண்ணம்மாவும் சந்தித்து பேசுவதே இதற்கு முன்னி காரணம். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திபடுத்து என்றும் கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment