Advertisment

Tamil Serial Rating : குடும்ப சண்டை போச்சு... இப்போ இந்த சண்டை... வேற வேலையே இல்லை?

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : குடும்ப சண்டை போச்சு... இப்போ இந்த சண்டை... வேற வேலையே இல்லை?

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அடப்பாவிகளா வாயில சுவீட் வைத்துவிட்டு அடியில் வெடிய வச்சிட்டீங்களேடா என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கட்டிவச்ச மனக்கோட்டை எல்லாம் கலைந்து விட்டதே.. என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் காதல் என்னும் சொல்லை நானும் சொல்ல வில்லை..சொல்ல வந்த நேரம் அவள் கையில் ஒரு பிள்ளை என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எங்கப்பனுக்கு மட்டும் ரெண்டு, எனக்கு மட்டும் ஏன் ஒன்னுக்கூட உருப்பட மாட்டேங்குது. என எழில் நினைப்பது போல கூறியுள்ளார்

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கரதுக்குள்ள உலகம் அழிந்துவிடும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஆரம்பத்துல அந்த கண்ணமாவும் இப்படி தான் இ௫ந்தான்க இதுவும் பழகிடும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அப்பாடா நம்ம தப்பிச்சோம் . அடுத்த ரவுண்டுக்கு ஆள் வந்தாச்சு என ரோஷ்னி நினைப்பது போல பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் புதிய கண்ணம்மாவை அன்புடன் வரவேற்க்கும் ரோசினி ஹரிப்பிரியன் ரசிகன் என்று கூறியுள்ளார். என்னதான் இருந்தாலும்....சேம் கண்ணம்மா முகம்  உடைய ஒரு கண்ணம்மாவ கொண்டு வந்து இருக்கீங்க. சூப்பர் என்று கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் முன்னாடி குடும்ப சண்டை இப்போ இந்த சண்டையா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சண்டை போமாமல் இருக்க முடியாதோ என்று கேட்டுள்ளார். மேலும ஒரு ரசிகர் வெளிநாடு எப்போ போறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ஒரு விறுவிறுப்பே  இல்லாமல் போகிறது சீக்கிரமா ஏதாவது பண்ணுங்க என்று கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அப்போ பைக் இப்போ வேன் நல்ல முன்னேற்றம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சீக்கிரமாக போய் மகாசங்கமத்தில் இணையுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த சீன பார்த்தால் காலேஜ் டூர் ஞாபகம் வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் முல்லை கதிர் சீன் சூப்பர் என்றே கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த அண்ணப்பூரணி இன்னும் அனு எங்க அனு எங்க என்று கத்திட்டே இருக்கு ரோஜாவும் அனு நான்தான் நான்தான் என்று சொல்லிட்டு இருக்கு சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த அன்னபூரணி தொல்ல தாங்க முடியல கொஞ்ச நாள் நிம்மதியா இருந்த மறுபடியும் வந்து விட்டது நம்ம உயிர வாங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த பாட்டி அர்ஜூன் ரோஜா கல்யாணத்தை கெடுக்க வந்துட்டாங்க . என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அண்ணப்பூரணியை விமர்சித்தே கருத்தக்களை கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். விவாகரத்து கேட்டு கண்ணம்மா பாரதி நீதிமன்றம் சென்றுள்ளதே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment