Advertisment

Tamil Serial Rating : அடுத்து உங்களுக்குதான்... ரெடியா இரு அனு கவுன்டிங் ஸ்டார்ட்...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : அடுத்து உங்களுக்குதான்... ரெடியா இரு அனு கவுன்டிங் ஸ்டார்ட்...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன காமெடி செல்விய சீரியஸா மாத்திட்டீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அங்க எழி்ல் சோகத்தில் இருக்காரு இங்க நீங்க சநதோஷமா இருக்கீங்களே பாக்யா அம்மா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் தங்கம் வாங்குர அளவுக்கு பாக்யா உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்களா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு பாக்யா ஒரு நல்ல உதாரணம் என்று கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஜெயிலுக்கு போனாலும் வில்லனுக்கு உதவி பண்ண ஆயிரம் பேர் வருங்க போல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அஞ்சலியை கடத்திட்டீங்க அடுத்த என்ன வெண்பா மேடம்... ஜெயிலுக்கு போயும் உங்க திமிரு அடங்கலையே என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் டைரக்டர் சார் எத்தனை நாளைக்குதான் பாரதியை முட்டாள் என்றே காட்டபோறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் சீக்கிரமா உண்மையை தெரியப்படுத்தி அடுத்த என்ன பண்ணலாம்னு யோசிங்க என்று கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மகா சங்கமம் சூப்பர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மூர்த்தி சென்னைக்கு வந்து பிரச்சனையை இழுத்துட்டீங்களே நீங்க குன்னக்குடி போனாலும் இந்த பிரச்சனை தொடருமா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படி நல்ல விஷயத்துல எல்லாரும் ஒன்னா இருந்தா து எவ்ளோ சந்தோஷம் தெரியுமா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மகா சங்கமத்தில் ஏதாவது உண்மை தெரியவருமா இல்ல நார்மலா அப்படியே முடிச்சி விட்ருவீங்களா என்று கேட்டுள்ளனர்.

ராஜா ராணி  2

இந்த ப்ரேமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ச்சனா செய்வதை யாரும் பார்க்கவே மாட்டார்கள் ஆனால் சந்தியா செய்தால், சிவகாமிக்கு மூக்கு வேர்த்துவிடும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வில்லன் செய்வது மட்டும் எந்த சீரியலிலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்படியே போனா இதுக்கு ஒரு முடிவே இல்லையா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அது என்ன அர்ச்சனா தப்பு பண்ணா மட்டும் எல்லாரும் மன்னித்து விடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ஜூன் அஸ்வின் திருமணம் நல்ல படியாக நடந்தது யாருக்கு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜூன் கிட்ட அடுத்த ஆப்பு அனுவுக்குதான் இருக்கு ரெடியா இரு அனு கவுன்டிங் ஸ்டார்ட் என்று கூறியுள்ளார். முதல் இரவு நாடகத்துக்கு எதிரியா என் நடகதுல நடக்கவே மடனுது நடந்த நாடகம் முடிச்சிடும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீரியல் இனிமேல் விறுவிறுப்பாக செல்லும் என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலே விறுவிறுப்பாக செல்கிறது என்று கூறலாம். விவகாரத்த கேஸ், வெண்பா சிறையில், அஞ்சலி கடத்தல் என பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறுவதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறலாம். மற்ற சீரியல்கள் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News Tv Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment