Advertisment

Tamil Serial Rating : இவ்வளோ சீக்கிரம் இயக்குனர் நம்மை சந்தோச பட விட மாட்டார் மக்களே... ரோஜாவுக்கு செக்

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : இவ்வளோ சீக்கிரம் இயக்குனர் நம்மை சந்தோச பட விட மாட்டார் மக்களே... ரோஜாவுக்கு செக்

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அடுத்த ஒரு 2 மாசத்துக்கு லக்ஷ்மி அம்மாவ இப்படிதான் காட்டுவீங்க போல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தனத்தக்கு இப்படி கனவு வரணுமே இது தானே உலக வழக்கம் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் லக்ஷ்மி அம்மாவை மிஸ் செய்வதாகவே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இது எல்லாம் சொன்னீங்க ஆனா கண்ணன பத்தி ஒன்னுமே சொல்லாம போறீங்களே அம்மா என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதி கண்ணம்மா பார்த்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்று கூறியுயள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி கண்ணம்மா இந்த ஜென்மத்தில் ஒன்றுசேர மாட்டார்கள் என கூறியுள்ளார். போன வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த வாரம் பாரதி கண்ணமா வா... என ஒரு ரசிகர் கேட்டுள்ளார். அப்படியே பாரதியை டிஎன்ஏ எடுக்க சொல்லுங்க என்று பதிவிட்டுள்ளார். பாரதியும் கண்ணம்மாவும் சேரவே சேர மாட்டார்கள் யாரும் அதிர்ச்சி அடைய தேவையில்லை என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். பாரதி ..கண்ணம்மாவ காதலிப்பது போன்ற நடித்த மாதிரி இதுவும் பொய் இல்லையே என ஒரு ரசிகர் கேட்டுள்ளார். இந்த சீரியல சீக்கிரம் முடிச்சிருவீங்கன்னு முதல்ல எங்களுக்கு சத்தியம் பண்ணி குடுங்கப்பா என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

பாக்யலட்சுமி

சீரியல் என்றாலும் பெண்கள் நினைத்தால் முடியும் என்பதை நடித்துக்காட்டும் பாக்கியலக்ஷ்மியும் சிங்கப்பெண் தான்... என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீரியலுக்கு பாவம் பாக்கியா என்டு பெயர் வைச்சிருக்கலாம் என்றும், கோபி கேரக்டர் ரொம்ப பாவம்!! பொண்டாட்டிகிட்ட எப்பவும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே பேசறது ரொம்ப கஷ்டமப்பா என்றும் கூறியுள்ளனர். மேலும ஒரு ரசிகர் கோபி க்கு புடிச்ச ஒரே விஷயம் ராதிகா தான் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபியை விமர்சிக்கும் அளவுக்கே பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செண்பக த்திற்கு பழைய ஞாபகம் வர இன்னும் 500 எபிசேட்டு மேல் ஆனாலும் ஆகலாம் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் செண்பகத்துக்கு பழைய நினைவுகள் திரும்பி ரோஜாவுடன் சேர்ந்து இருப்பதை பார்க்க வேண்டும் என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். இவ்வளோ சீக்கிரம் எல்லாம் இயக்குனர் நம்மை சந்தோச பட விட மாட்டார் மக்களே... என ஒரு ரசிகர் கூறியுள்ளார். இவுங்களுக்கு பழைய நியாபகம் வர்றதுக்குள்ள எனக்கு வயசாகிடும் என ஒருவர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சனமே செய்துள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அப்பாடா இப்பதான் ரொமான் போஷன் வருது அதுக்குள்ள சண்டைய மூட்டி விட்ராதீங்கடா என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே தொடரட்டும் என்றே பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். லக்ஷ்மி அம்மா இறுதிச்சடங்கு முடிந்த அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்பே இதற்கு காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment