Advertisment

Tamil Serial Rating : எதிர்பாராத விஷயம் உங்ககிட்ட இங்கு யாரும் கேட்கல... வெளியான ரோஜா ரகசியம்

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : எதிர்பாராத விஷயம் உங்ககிட்ட இங்கு யாரும் கேட்கல... வெளியான ரோஜா ரகசியம்

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சந்தோஷத்தை பார்க்க எத்தனை நாள் ஆச்சு.. என்ன ஒன்னு கண்ணனையும் கூட்டிக்கிட்டு போய்ருக்கலாம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மீனா ஜீவா காம்போ செம.. என்று கூறியுள்ளார்.  மற்றொரு ரசிகர் என்ன மீனா திடீர்னு பிக்பாஸ வம்புக்கு இழுக்குறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சுற்றுலா போறது எல்லாம் சந்தோஷமாதான் இருக்கும் ஆன அங்க கண்ணனை யாரும் கண்டுக்கவே இல்லையே என்று கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இக்கட்டான சூழ்நிலையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை கோபிடம் கற்றுக்கொள்ளலாம் என்ன நடிப்பு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ராதிகாவுக்கு இந்த ஜென்மத்தில் உண்மை தெரிய போறது இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் போன வாரம் கோபி பத்தி ராதிகாவுக்கு தெரிஞ்சது... அதுக்கு முன்னாடி கோபி பத்தி அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சது இது ரெண்டுபே பெருசா வெடிக்கலயே ஏன் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுகிறீர்களே டைரக்டர் சார் என்று கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பரவாயில்லையே உடனே கோர்ட் சீனுக்க வந்துட்டீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஏன் நீதிபதி ஆச்சரியமா பாக்குறாறு... அவருக்கும் கண்ணம்மாவை தெரியுமோ என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணம்மா ரோலில் ரோஷ்னியே நடித்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். அதில் ஒருவர் பாரதி வெண்பாவை தவிர வேறு யாரையுமே நம்ப மாட்டாரா என்று கேட்டுள்ளார். மேலும் ஒருவர் நீதிமன்றமே டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லு என்று கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஒவ்வொரு மனைவியும் இப்படியே இருந்துட்டா கவலையே இல்ல ஜாலியா இருக்கலாம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ஏதோ இப்பதான் ரொமான்ஸ் துளிர்விடுது அதுக்கும் அப்பு வச்சிடாதீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இது எல்லாத்துக்கும் சந்தியாதான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீன சிவகாமி பார்த்த என்னாகும்? என்று கேட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மறு மாங்கல்யம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடைபெறும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இருக்குறத விஷயத்தை ஒழுக்கமா எடுங்க‌‌ போதும்.. எதிர்பாராத விஷயம் இங்கு யாரும் கேட்கல.. உங்ககிட்ட..என்று கூறியுள்ளார். நாங்க எதிர்பாத்தது மட்டும் தான் அறங்கேரும், எதிர்பாக்காததுன்னு சொல்லி எங்கள ஏமாத்துனது போதும் என்று ஒருவர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படி எதிர்பார்க்கவச்சி ஏமாத்துரது தானே உங்களோட வேலை என்று கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கண்ணம்மா ரோலில் நடித்து வந்த நடிகை ரோஷ்னி விலகியதை தொடர்ந்து தற்போது புதிதாக வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இதுவே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம் மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும என்று கூறலாம்..

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment