Advertisment

Tamil Serial Rating : அங்கும் இங்கும் எங்கும் நம்ம சந்திரகாந்தா... ஆனா நீங்க எப்படி மேடம் இங்க...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : அங்கும் இங்கும் எங்கும் நம்ம சந்திரகாந்தா... ஆனா நீங்க எப்படி மேடம் இங்க...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அர்ஜூன் இருக்கும் வரை ரோஜா வுக்கு எதுவும் நடக்காது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அங்கும் இங்கும் எங்கும் நம்ப சந்திரகாந்தா என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த துப்பாக்கி குண்டு ஒன்று சாட்சி கையில பாய்ந்து இருக்கும் இல்லை ரோஜா கையில பாய்ந்து இருக்கும்.என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த எபிசோடுக்காக வெயிட் செய்கிறோம் என்று கூறியுள்ளனர். சிறுபிள்ளை தனமா வெகுளியா சிரித்து கொண்டே இருந்த ரோஜா ஆக்ரோஷமாயி. சாட்ஷி. கையில். இருக்கும். துப்பாக்கியை எட்டி பிடித்து மடக்கியது. சூப்பர் என்று ஒருவர் கூறியுளளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன வெண்பா வீட்டு வேலைக்காரி பாரதியை கேள்வி கேட்குராங்க அந்த அளவுக்கு போய்டுச்சா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஆட்டோக்கார அண்ணே பாரதி உங்க மச்சாதான் விட்ராதீங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வெண்பா உள்ள வர வரைக்கும் செம்ம காமெடியாக இருக்கும் போல என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வெண்பா வேலைக்காரியை ஏதாவது மாட்டி விடுங்க டைரக்டர் சார் என்று கூறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன கண்ணன் வீட்டுக்குள்ள வந்துடான் போல என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் இணையப்போகிறது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் என்னதான் சொல்லுங்க மீனா செம்ம என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் இணைந்தால் அதற்கு முக்கிய காரணம் மீனாதான் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவை புகழ்ந்துள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தாத்தா உங்கள டம்பி பீஸ்னு நினைத்தோம் ஆன கில்லி மாதிரி பேசுறீங்களே என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன கோபி உங்க அப்பாவே உங்களுக்கு வி்ல்லனா வந்துட்டாரா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்போதான் கதை சூடு பிடிக்குது அடுத்து எனன செய்ய போறீங்க ஆவலுடன் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் தாத்தாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். கண்ணன் பணத்தை எடுக்கவில்லை என்று தெரிந்து ஜீவா மற்றும் கதிர் அவனுடன் பேசுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment