Advertisment

Tamil Serial Rating : பிரச்சனைய கிளப்பி விட்டுட்டீங்களா... அப்போ கோபி மேட்டர் என்னாச்சி..?

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : பிரச்சனைய கிளப்பி விட்டுட்டீங்களா... அப்போ கோபி மேட்டர் என்னாச்சி..?

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தனம் அம்மா தான் பிரச்சனையை ஏற்படுத்துராங்க ஆன அவங்கள விட்டுட்டு மீனாவை குறை சொல்கிறார்கள். மீனா சொல்வது போல் இங்கு மத்தவங்களுக்கு ஒரு ஞாயம் மீனாவுக்கு ஒரு ஞாயம் என்றுதான் உள்ளது என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தனம் இதுக்கு ஒரே தீர்வு உங்க அம்மாவை கூட்டிக்கிட்டு நீயும் அவங்க வீட்டுக்கு போய்டு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தனம் ஓவர் ஆக்டீங் பண்ணாத என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சி்ன்ன சின்ன சண்டைய பெருசா மாத்துங்க அப்போதான் சீரியல் நல்லாருக்கும் என்று கூறயுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா லக்ஷ்மிடம் உண்மையை சொன்னால் என்ன என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசகர் பாவம் லக்ஷ்மி அப்பா பாசத்திற்கு ஏங்குகிறார் என்று கூறியுள்ளார். மற்றொருவர் ஒரு குழந்தை அம்மா பாசத்திற்கு ஏங்குது இன்னொரு குழந்தை அப்பா பாசத்திற்கு ஏங்குது இதுக்கு நடுலா பாரதியும் கண்ணம்மாவும் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீக்கிரமா உண்மையை தெரியபடுத்துங்க என்று கூறியுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் உங்க வீட்டு பையன் மேல தப்ப வைச்சிகிட்டு ஜெனிய குத்தம் செல்றீங்களே பாட்டி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரைட்டு இதுலயும் பிரச்சனைய கிளப்பி விட்டுட்டீங்களாக இந்த பிரச்சனையில கோபி மேட்டர் மறந்து போய்டும் அதான நடக்க போகுது என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்போ சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கேய செழியன் கேரக்டரை மாத்துங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செழியன் மற்றும் பாட்டியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு்ளளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரொமான்ஸ் துளிர்விடுதா ஆனா சிவகாமிக்கு இதெல்லாம் புடிக்காதே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நீங்க நெருஙகுனாவே அங்க ஒரு பிரச்சனை வெடிக்கனுமே எப்போ வெடிக்கும் என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ச்சனாவ கூப்பிடுங்க இங்க ரெண்டுபேரும் ஹேப்பி என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அடுத்து என்ன பிரச்சனை வெடிக்க போகிறது என்றே கேட்டுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சரண்யா எப்போமே இப்படித்தான் நீங்க பயப்படாதீங்க நாச்சியார் அம்மா மாயன் உங்களை கைவிட மாட்டார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீரியல் மட்டும் தான் அதிக ட்விட்டர் இருக்கு விறுவிறுப்பாகவும் போகுது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் மாயன் கெத்து காமிப்பார் அதை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சி சீனுக்காக எதிர்பார்க்கிறோம் என்றே கூறியுள்ளனர்.

தமிழும் சரஸ்வதியும்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வரும்னு பார்த்தா இங்க ரூட்டே மாறுது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அண்ணியாரின் ஆட்டம் ஆரம்பம்!! என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் மிகவும் பிடிக்கும் என்றே பதிவிட்டு்ளளனர்.  

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும் போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். மாயன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பே இதற்கு முக்கிய காரணம். மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்கள திருப்திப்படுத்தும் என்று கூறியுள்ளர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment