Advertisment

Tamil Serial Rating : இப்படியே போனா நல்லாதான் இருக்கும்... ஆனா டைரக்டர் என்ன செய்வார்னு தெரியலயே?

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : இப்படியே போனா நல்லாதான் இருக்கும்... ஆனா டைரக்டர் என்ன செய்வார்னு தெரியலயே?

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அவன் அப்படி என்ன தப்பு பண்ணிட்டான். கூட படிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான் இது ஒரு தப்பா? உங்க்கிட்ட சொல்லிருந்தா சேர்த்து வச்சிருப்பீங்களா என்று கேட்டுள்ளார். மேலும் திருமணத்திற்கு முன்பு கண்ணனை விமர்சித்த ரசிகர்கள் தற்போது அவனுக்கு ஆதரவாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முன்பு இருந்த விறுவிறுப்பு தற்போது குறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டும் வகையிலே ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் செழியன் ஜெனியுடன் சேர்ந்துவிட்டாலும் பாக்யாவுக்கு இப்படி ஆகிவிட்தே என்று கூறியுள்ளார். மேலும் பலரும் பாக்யாவுக்கு அடிப்பட்து குறித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மேலும் பல இல்லங்களில் பாக்யலட்சுமி போல பலர் உள்ளனர் என்று கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்ப தான் சீரியல் நல்லா போகுது அப்படியே அந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி கண்ணம்மா கதை இதே மாதிரி அழகாக போன நல்ல இருக்கும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி கண்ணம்மா இப்படியே எப்போதும் இருக்கணும்னு யாருக்கெல்லாம் ஆசை என கூறியுள்ளார். மேலும் பலரும் இதே சீன் மேலும் தொடரட்டும் என்றே பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ‘

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தியாவுக்கு பாராட்டுக்களே தெரிவித்துள்ளனர். மற்றும் சிலர் சந்தியா என்னதான் இப்படி நல்லது செய்தாலும், கடைசியில் சிவகாமியிடம் திட்டுதான் என்று கூறியுள்ளனா.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜாவின் கண் கிரிமினல் கண்..... ரோஜா கண்டா விட்டுடுவாளா..... ரோஜா கண்டுடா கண்ணாடில அனு திரும்பி பார்த்தத என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் யசோதாவுக்கு போட்ட அடியை பாட்டிக்கு போடு ரோஜா என பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் ரோஜாவுக்கு பராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில் சில ரசிகர்கள் அணுவின் நடிப்பை கண்டுபிடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகுமா என்று கேட்டுள்னர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது, பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பிரிந்திருக்கும் பாரதி கண்ணம்மா இருவரும் தற்போது ரொமானஸ் பாதையில் செல்வதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment