Advertisment

Tamil Serial Rating : மறுபடியும் பூஜை பரிகாரமா? முடியல சாமி, நாடகத்தின் பெயர் மாற்றிடுங்க...

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : மறுபடியும் பூஜை பரிகாரமா? முடியல சாமி, நாடகத்தின் பெயர் மாற்றிடுங்க...

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்யடின் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தனம் பாவம் என்றும், முல்லை அம்மாவை திட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் கண்ணன் பண்ணதுக்கு தனம் என்ன பண்ணுவா என்று கேட்டு வருகின்றனர். மேலும் ரசிகர்கள் இதெல்லாம் சும்மா இன்னும் கொஞ்ச நாள்ள கண்ணன் வீட்டோட சேர்ந்துவிடுவான் என்று கூறியுள்ளனர்.

பாக்கியலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த பலரும் ஈஸ்வரிக்கு விமர்சனங்களை தொடுத்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் இவளே ஒரு அரவேக்காடு என்று கூறியுள்ளார்.  மற்றொரு ரசிகர் இது ரொம்ப ஓவரா இருக்கு முடியல சாமி என்று பதிவிட்டுள்ளார்.  மேலும் ஒரு ரசிகர் இது உனக்கு போதும் என்று பதிவிட்டுள்ளனர். இதில் பாக்யாவுக்கு ஆதரவாகவே ரசிகர்கள் பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலர் செம்ம சீன் என்று கூறியுள்ளனர். இதற்கானத்தான் பல நாட்களாக காத்திருந்தோம் என்று கூறியுள்ளனர். இப்போ பாரதிக்கு உண்மை தெரிஞ்சிப்போச்சி அடுத்து என்ன நடக்கும் என்று பலரும் கேள்வி எழுபியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கீங்க அப்படியே டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க என்று கேட்டுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஸ்டார்ட் பண்ணிட்டீங்களாடா என்று கேட்டுள்ளார். இப்போதா நல்லா போய்க்கிட்டு இருக்கு அதுக்குள்ள ஒரு பிரச்சனைய கௌப்பிட்டாங்களே என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். மேலும பலரும் திரும்பவும் மொதல்ல இருந்தா என்பது போல பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த அண்ணப்பூரணி போட்ட பிளான்ல அனுவும் அவங்களுமே மாட்டிக்கிடனும் டைரக்டரே என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மறுபடியும் பூஜை பரிகாரம் முடியல நாடகத்தின் பெயர் மாற்றிடுங்க என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் காளி பூஜையில அண்ணப்பூரணியை பலி கொடுங்க எள்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சீரியலுக்கு எதிராகவே கருத்தக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்த கருத்துக்களின்படி பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்று கூறலாம். அதற்கு முக்கிய காரணம் லக்ஷ்மி கண்ணம்மாவின் குழந்தைதான் என்று பாரதி தெரிந்துகொண்டது என்பதை கூறலாம் மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment