Advertisment

Tamil Serial Rating : சௌந்தர்யா சரியாத்தான் கேக்குறாங்க... ஆனா கண்ணம்மாவ பார்த்தா தான் கடுப்பாகுது...

Tamil Serial News : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : சௌந்தர்யா சரியாத்தான் கேக்குறாங்க... ஆனா கண்ணம்மாவ பார்த்தா தான் கடுப்பாகுது...

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சூப்பர் இப்படியோ சொதப்பாம கொண்டுபோங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் உன்னை பார்த்தா யாருக்கும் புடிக்காது வெளியில போ என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இது ஆரம்பம்தான் இனிமேதான் முழு ஆட்டமும் இருக்கு என்று கூறியுள்ளார். அதில் ஒரு ரசிகர் கஸ்தூரி சுயரூபம் தெரியாம இதுங்க ஆடிகிட்டு இருக்குங்க என்ன நடக்க போகுதோ என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ரொம்ப ஓவரா இருக்கே என்று பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்ஒருவர் சௌந்தர்யா சரியாத்தான் கேக்குறாங்க ஆனா கண்ணம்மா மூஞ்சிய பாத்தா கடுப்பாகுது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் வெண்பாதான் மிரட்டுகிறார் என்று உண்மையை சொன்னால் என்ன கண்ணம்மா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நீங்களே பேசிக்கிட்டு இருந்தா எப்படி அங்க வெண்பா ஆவலோட காத்துக்கிட்டு இருக்கும் போய் டைவர்ஸ் கொடுங்க கண்ணம்மா என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணம்மாவின் முகத்தை பார்க்கவே கடுப்பாகுது என்று கூறியுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எல்லாருக்கும் இந்த மாதிரி மாமனார் கிடைக்க மாட்டாங்க..... பாக்கியலட்சுமிக்கி அவங்க மாமனார் ஆதரவாக இருக்கிறார் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாக்கியாவ திட்டுறதே இந்த கோபிக்கு வேலையா போச்சி  இவரோட விஷயம் மட்டும் பாக்கியாவுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான் என ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நல்ல ஒரு கணவன் இல்லாம இருந்தாலும்.....நல்ல ஒரு மகன் மற்றும் மாமனார் மாமியார் கிடைச்சா அதுவே போதும் என கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த பிரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சூப்பர் காமெடி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சந்தியாவை மட்டம் தட்ட சிவகாமிக்கு இன்னொரு விஷயம் கெடச்சிடுச்சி என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் செம காமெடி என்றே பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜா தான் செண்பகம் பொண்ணு என்று தெரிய வேண்டும் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்போதான் அண்ணப்பூரணி சரியா பேசுது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ப்போதான் பாட்டிமா கொஞ்சம் புத்தி வந்திருக்கு என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாட்டிக்கு பாராட்டையே தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். ஹேமாதான் கண்ணம்மா பொண்ணு என்ற உண்மை தெரிய வருவதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறலாம் மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment