Advertisment

Tamil Serial Rating : கடத்தல், பைட்டு, ஆஸ்பிடல், கோவில், பரிகாரம்... 5 வார்த்தைகளில் அடங்கிய சீரியல்...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : கடத்தல், பைட்டு, ஆஸ்பிடல், கோவில், பரிகாரம்... 5 வார்த்தைகளில் அடங்கிய சீரியல்...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மீனா ரொம்ப கிரேட் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தனம் முல்லை ரெண்டுபேரும் வெளியில காமிச்சாலும், மீனா தன் பாசத்தை உள்ளுக்குள்ளயே வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்கு அவனை வீட்டுக்குள்ளயே விட்ருக்கலாமே என்று கூறியுள்ளார். வீட்ல இருக்க எல்லாம் கொடுப்பீங்க எல்லாரும் நல்லா பேசுவீங்க ஆனா வீட்டுக்குள்ள மட்டும் சேர்த்துக்க மாட்டீங்க என்ன ஞாயம் இது என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதிக்கு அறிவே இல்லையா பொண்டாட்டிய நம்பவே மாட்டேன்னு சொல்றான். ஆனா தப்பு செய்யற வெண்பாவ தப்பே செய்திருக்க மாட்டானு நம்புறான் இத எப்படி சொல்றது என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி சார் வெண்பா தவிற மற்ற யாரையும் நம்பமாட்டார் குட் டாக்டர் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்ப கொஞ்ச நாளா வெண்பா பல்ப் வாங்கிட்டு இருந்தாங்க இப்போ கண்ணம்மா பல்ப் வாங்க போறாங்க இதுல என்ன இருக்கும் எல்லாம் சீரியல்ல சகஜம் தான் என்று கூறியுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வீட்ல எவ்ளோ பெரிய பிரலயம் வெடிச்சிக்கிட்டு இருக்கு இங்க உனக்கு ரொமான்ஸ் கேக்குதா என்று கேட்டு என்று கேட்டுள்ளார். மற்றொரு இவங்க லவ் ட்ராக் வீட்டுக்கு எப்போ தெரியபோகுதோ என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யலட்சுமி ஏதொ உருப்படியாக போய்கிட்டு இருந்துச்சு அதுலயும் சண்டைய உண்டாக்கிட்டீங்களாக என்று கேட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர்  அவரவர் அவரவர் பிரச்சனைகளை பார்த்துக்கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த தொடர் முழுவதும் கோவில் அம்மன் மற்றும் அழுகை வேற ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். கடத்தல், பைட்டு, ஆஸ்பிடல், கோவில், பரிகாரம் . இதைதான் ஒரு வருடமா மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். ரோஜா இப்போ அழுது என்ன செய்வது... நீ முன்னாடியே அர்ஜுன் சொன்னத கேட்டு இருந்தா.. இப்படி ஆகிருக்குமா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அர்ஜுன் இந்த நிலைமைக்கு ஆனதுக்கு ரோஜா தான் பரிகாரம் ஆரமிச்சி விட்டது என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். வெண்பா ஜெயிலுக்கு போனது பாரதி அவளை சந்தித்து கண்ணம்மாலுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியது என பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறுவதே இதற்கு முக்கிய காரணம் மற்றடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment