Advertisment

Tamil Serial Rating : கண்ணம்மா இப்போதான் நீங்க சரியான ரூட்ல போய்கிட்டு இருக்கீங்க... ஆனால் கவனம் தேவை...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : கண்ணம்மா இப்போதான் நீங்க சரியான ரூட்ல போய்கிட்டு இருக்கீங்க... ஆனால் கவனம் தேவை...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஏமா ராதிக அந்த மேக்அப் கொஞ்சம் கம்மி பண்ணா என்னம்மா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்ன கோபி இப்போதான் நீங்க ராதிகாவுக்கு பழச எல்லாம் ஞாபகப்படுத்துறீங்களா என்று கேட்டுள்ளார். அப்பாவுக்கு தெரிஞ்சபிறகும் கோபி இப்படி நடந்துகிறாரே... அப்பா மேல பயம் இல்லையா என்று கேட்டுள்ளார். மற்றொ ரசிகர் நீங்க இப்படியெல்லாம் சீரியல் எடுத்தா அப்புறம் பசங்க எப்படி அப்பாவ மதிப்பாங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பலபேர் இப்படித்தான் இருக்காங்க குடும்படுத்தில் உள்ளவர்களை நினைக்காமல் என்று கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த பாழாய்போன சந்தியாதான் காரணம் பாவம் என் பையன் சரவணன் என்று சிவகாமி சொல்வார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சரவணனின் எதார்த்த நடிப்பு சூப்பர் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நல்லா சமைச்சாதான் பரிசு மனிதாபிமானத்திற்கு பரிசு இல்லையா என்னாங்க ரூல்ஸ் இது என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சிவகாமி பேசுவது போன்றே இதுக்கு எல்லாம் காரணம் சந்தியாதான் என்று கூறியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணன் பாவம் என்னதான் தப்பு பண்ணிருந்தாலும் தனத்தை காப்பாற்றியிருக்கிறான் அதை மூர்த்தி நினைத்து பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொ ரசிகர் மீனா கண்ணுல மட்டும் எப்போமே கண்ணன் மாட்டிக்கிறான் என்று கூறியுள்ளார். மற்றொ ரசிகர் இன்னும் எத்தனை நாளைக்குதான் அவனை எதிர் வீட்டில் வைத்திருப்பீர்கள் மூர்த்தி என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணனை பாவம் என்று கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒரு அப்படி போடுங்க கண்ணம்மா இப்போதான் நீங்க சரியான ரூட்ல போய்கிட்டு இருக்கீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணம்மா அவங்க புருஷன் கூட பழகுராங்க இதுல உனக்கு என்ன வந்துச்சு வெண்பா என்று கேட்டுள்ளார். பாவம் கண்ணம்மா வெண்பா பெரிய வில்லி கொஞ்சம் மரியாதை கொடுங்களேன் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இனிமே வெண்பா ஆட்டம் தொடருமா இல்லையா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ரோஷினிய ஏன் தூங்கிட்டீங்க என்று கேட்டுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் எப்படியும் மாயன் தான் ஜெயிக்க போகிறார் அதுக்கு ஏன் இவங்க உலக நாடுகள் பேரல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சீக்கிரம் சீனுக்கு வாங்க இன்னைக்கு இதோட முடிச்சிடாதீங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் மாறன் எத்தனைமுறைதான பல்ப் வாங்குவார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் எபிசோடுக்கு வெயிட் செய்வதாக அறிவித்துள்ளனர்.

கயல்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கயல் சீரியல் நன்றாக உள்ளது என்று கூறியுள்ளனர். இதில் ஒரு ரசிகர் இந்த ப்ரமோவுக்கு முன்பு வரும் அண்ணாத்த பட டிரெய்லரை பார்த்து நல்லா இருந்தா நாங்களே வந்து பார்போம் ஏன் இப்படி ஸ்கிப் பண்ணி சாகடிக்கிறீங்க என்று கேட்டுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக வரவேற்பு உள்ளது என்று கூறலாம்.க வெண்பா கண்ணம்மாவிடம் கேள்வி கேட்கும் சீன்காக பலர் காத்திருக்கின்றனர். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment