Advertisment

Tamil Serial Rating : 6 நாள் என்னா... ஆறே நிமிஷத்தில கூட போ... ஆனா இதை பண்ணிவிட்டு போ...

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating :  6 நாள் என்னா... ஆறே நிமிஷத்தில கூட போ... ஆனா இதை பண்ணிவிட்டு போ...

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கஸ்தூரி மூட்விட ஸ்டார்ட் பண்ணிட்டாங்க ஆன மீனா சரியாக கண்டுபிடித்துவிட்டார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மொக்கயைாக போகுது சீரியல் கொஞ்சம் விறுவிறுப்பாக கொண்டு போங்க என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குட்டி இட்லி கடை என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே போய்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் சீ்க்கிரமா ஒரு முடிவுக்கு வந்து விறுவிறுப்பாக கொண்டு போங்க என்று கூறியுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாக்கியலக்ஷ்மி சீரியல் கோபி மாட்டிகிற தருணத்திருக்காக வெயிட் பண்றோம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர்  எழில் காதல் சொல்லும் போது கோபி ராதிகாவிடம் பேசுவது போல் இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் உன் ஆளுக்கும் பொண்ணு இருக்கு; என் ஆளுக்கும் பொண்ணு இருக்கு என கோபி நினைப்பது போல கூறியுள்ளார். எவ்வளவு தான் மேகம் மூடினாலும் வெளிவரும் நேரம் வரும்போது நிச்சயம் வெளிவரும் சூரியன்... அது போல் தான்...! எவ்வளவு தான் மூடி மறைத்தாலும். ஒரு நாள் உண்மை ஆதாரத்துடன் வெளிவரும் என்று கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த நாடகம் முடியும் போது நம்ம‌ எல்லாம் பாட்டி தாதா ஆகி செத்து போய்ருபோம் என கூறியுள்ளார். சீரியலை பார்க்க அவசியமில்லை, ப்ரமோ மட்டும் பார்த்துவிட்டு, "ஓ, கதை இப்படி போதா? என்று அடுத்த ப்ரமோவுக்கு காத்திருக்கும் பரிதாபங்கள் நாங்கள் என்று கூறியுள்ளார். உலகத்துலயே பொருமையானவங்க இந்த சீரியல் பாக்குறவங்க தான் என்று ஒருவர் கூறியுள்ளார். ஆயிரம் பேர் மாற்றினாலும் பழைய கண்ணம்மா மாதிரி வராது . அந்த சிரிப்பு என்று கூறியுள்ளார். 6 நாளே என்னா...ஆறே நிமிஷத்தில கூட போ அதுக்கு முன்னாடி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துக் கொடுத்துட்டு போப்பா என்று ஒருவர் கூறியுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னதான் நீங்க ரொமான்ஸ் பண்ணாலும் அடுத்தவர் மனைவி என்ற நினைப்புதான் வருகிறது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சரவணன் நல்லாத்தான சொல்லிருக்கார் இயற்கை காற்றுக்கும் செயற்கை காற்றுக்கும் வித்தியாசம் இருக்குல்ல என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இந்த புரோகிராம் வைத்து இந்த வாரத்தை ஓட்டிடுவீ்ங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இதையே எத்தனை நாளைக்கு பண்ணுவீங்க என்று கேட்டுள்ளார்.

ரோஜா

1000 மாவது எபிசோடில் காலடி எடுத்து வைக்கபோகும் ரோஜா குடும்பத்திற்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ஜூன் ரோஜா செய்தது சூப்பர் அனு விற்கு இது பாத்தது இன்னும் தண்டனை வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும ஒரு ரசிகர் அனு நெனைக்குறது நடக்காது அர்ஜுன் ரோஜா கடைசி வரைக்கும் அந்த வீட்டுல தான் இருப்பாங்க.. பிரியா நீ தான் அந்த விட்ட விட்டுட்டு ஓட போற நாங்க அத பார்க்கதான் போறோம்.. என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வழக்கம்போல் அர்ஜூன் ரோஜாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சரண்யா வீட்ட விட்டு போய்ட்டாலா சூப்பர் இனிமே நாச்சியார் குடும்பம் உருப்பட்டுவிடும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மாயன் ஏன் இப்படி பீல் பண்றீங்க பரவாயில்லை விடுங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயன் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப் உள்ளது என்று கூறலாம். அனுவை பிடித்துள்ள அர்ஜூன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளதே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.    

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment