Tamil Serial Rating : பாரதி இவ்ளோ பேசுறாரு சௌந்தர்யா அம்மா ஏன் அமைதியா இருக்கீங்க…

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் எப்படியோ ஒரு வழியாக சாப்பாடு செஞ்சிட்டீங்க… என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இன்னைக்கு ஓகே நாளைக்கு என்ன பண்ணபோறீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்த அனைவரது நிலைமையும் இப்படித்தான் என்று கூறியுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் கண்ணன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று கேட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பொய்யை மட்டுமே நம்புற இந்த நீ மத்தவங்க பொய் சொல்றாங்கன்னு சொல்லுற. அதுங்களும் முழிக்குதுங்க என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பொய்யின் மொத்த உருவம் வெண்பாதான் அதை கண்டுபுடிங்க பாரதி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி இவ்ளோ பேசுறாரு ஏன் சௌந்தர்யா அம்மா அமைதியா இருக்கீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள்பலரும் பாரதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ஒரு ரசிகர் ஆபீஸ் உள்ள ஊழியர்களுக்கு தெரியுது உங்களுக்கு தெரியலயே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியோ பிஸினஸ டெவலப் பண்ணுங்க நல்லாருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபிக்கு எதிராகவும், பாக்யாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாயன் நடிப்பு சூப்பர் என்று கூறியுள்ளார். மாயன் எப்பவுமே நாச்சியார் பக்கம்தான் இருப்பார் என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும்இந்த சீரியல் தான் போர் அடிக்காமல் போகிறது என்றும், விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் இதுதான் என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சீரியல் எப்படித்தான் நல்லா போனாலும் இவங்க சண்டை முடியவ முடியாது போலவே என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பல வீடுகளில் இப்படித்தான் கணவன் மனைவி புரிதல் இல்லாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கதையை மாற்றுங்கள் டைரக்டர் சார் என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரயலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம. பாரதியில் லக்ஷ்மி என் குழந்தைதான் என்று கண்ணம்மா கூறியதால் பரபரப்ர் நிலவிவருகிறது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்ந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating updte with promo video

Next Story
Vijay TV Serial; லட்சுமி என் பொண்ணு, உண்மையை உடைத்த கண்ணம்மா… என்ன செய்ய போகிறான் பாரதி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com