Advertisment

Tamil Serial Rating : ஏன் இப்படி ஜவ்வா இழுக்கிறீங்க டைரக்டர் சார்... சோதனை கட்டத்தில் பாரதி கண்ணம்மா

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : ஏன் இப்படி ஜவ்வா இழுக்கிறீங்க டைரக்டர் சார்... சோதனை கட்டத்தில் பாரதி கண்ணம்மா

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ஒரு ரசிகர் ஒருத்தர் வெளியே போன ஒருத்தர் உள்ள வந்துதான ஆகனும் என பதிவிட்டுள்ளார். தனத்திற்கு குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று பலரும் கமெண்ட் செய்துள்ளனர். குழந்தை பிறந்தாலாவது கண்ணனை வீட்டுக்குள்ள சேர்ப்பீங்களா என்று மற்றொரு ரசிகர் கேட்டுள்ளார். கடுப்பாகுது டைரக்டர் சார் கதைய சுவாரஸ்யாக கொண்டுபோங்க என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஏன் பாக்யாவ எப்போமே ஒரு படபடப்பாவே காட்றீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கவலைப்படாதீங்கா பாக்யா அம்மா எல்லாம் நல்லதுக்குதான் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யாவின் பரிதாப நிலை குறித்தே கருத்துக்களை கூறியுள்ளனர். அதில் ஒரு ரசிகர் பாக்யாவ தைரியமான குடும் பெண்ணா காண்பிக்கலாமே என்று கேட்டுள்ளார்.

பாரதி கண்ணம்ம்மா

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வீட்டிற்கு வந்தவர்களை எழுந்து நின்று வரவேற்போம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே காட்டுவிங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஏன் இப்படி ஜவ்வா இழுக்கிறீங்க டைரக்டர் சார் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இதெல்லாம் சரியா பண்றீங்க ஆனா அந்த டிஎன்ஏ டெஸ்ட் ஏன் எடுக்கமாட்றீங்க என்று கேட்டுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் டைமிங் முக்கியம் தான் ஆன இதையே எத்தனை நாளைக்கு ஓட்டுவீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் எலியும் பூணையுமா இருந்த சந்தியா பார்வதி இப்போ இணைந்துவிட்டார்கள் நல்லது என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சந்தியா சரவணன் கதைக்கு எப்போ வருவீங்க என்று கேட்டுள்ளார். மேலும் பலரும் கதைய சுவாரஸ்யமா கொண்டுபோங்க என்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாயன் நாச்சியார் குடும்பத்தை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இனி மாயன் நாச்சியார் குடும்பத்துடன் செல்வார் குடும்பம் பிரிந்து மாயன் மாறன் எதிரிகளாக மாறும் தருணம் இது என கூறியுள்ளார். கண்டிப்பா மாயன் தங்கச்சிங்களையும்& நாச்சியார் அம்மாவையும் விட்டு தரவே மாட்டான் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மாயன் வாக்கு மாற மாட்டான், இனிமேல் மாயன் & மாறன் மோதல். இனிதான் சிறப்பான தரமான சம்பவம் இருக்கு என பதிவிட்டுள்ளார்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். திடீரென எண்ட்ரி கொடுத்த மாறன் தற்போது மாயனுடன் மோதும் தருணமே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம். மற்ற சீரியல்கள் அனைத்து அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment