Advertisment

Tamil Serial Rating : செண்பகமே செண்பகமா நடிக்கணுமா? சூப்பர்ங்க உங்க ஸ்டோரி

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : செண்பகமே செண்பகமா நடிக்கணுமா? சூப்பர்ங்க உங்க ஸ்டோரி

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணன் பாவம் அவன விடுங்க அம்மாவ பார்க்கட்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு  ரசிகர் மூர்த்தி எவ்வளவு பாசமா இருந்தாரே அதே அளவு வெறுத்துவிட்டாரா என்று கேட்டுள்ளார். வெளியில இருக்கும்போது அவனுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இப்போ பக்கத்துல வந்த உடனே திட்டுரீங்களே ஒன்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணன் பாவம் என்பதை சொல்லும் வகையிலே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் உலகமகா நடிகனா இருக்கீங்களே கோபி என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பாக்யாவுக்கு அறிவே இல்லையா இதுவரைக்கும் புடவையே எடுத்து கொடுக்கல இப்போ மட்டும் எப்படினு யோசிக்க வேண்டாமா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி இந்த முறையும் கிரேட் எஸ்கேப்பா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் ஏன் இப்படி பண்ணுரீங்ங்க சீக்கிரமா உண்மை தெரியட்டுமே என்று கேட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அடேங்கப்பா என்ன ஒரு விறுவிறுப்பான சீன் என்று பதிவிட்டுள்ளார். மருமகள் வந்தால் சந்தோஷப்படும் சௌந்தயா அம்மா இப்போ என்னாச்சி என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வாழ்நாளிலே அஞ்சலி இன்னிக்கி தான் ஒரு நல்லது பண்ணி இருக்கு இதுக்கு அப்புறம் கண்ணம்மா ஹேமாதான் இரண்டாவது பொண்ணுன்னு தெரிய வரும் போல இருக்கு என கூறியுள்ளார். பாரதி குடும்பத்து கிட்ட அசிங்கபடவே கிளம்பி வந்திடுவார் வெண்பா என ஒரு ரசிகர் கூறியுள்ளார். ஒரு வழியாக பாரதி- வெண்பா கல்யாணம் நடக்கவில்லை னு கண்ணம்மாக்குத் தெரிந்துவிட்டது என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

ராஜாராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அடப்பாவிகளா சீரியலா இருந்தாலும ஒரு ஞாயம் வேண்டாமாடா ரொம்ப பண்ரீங்களே என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இதுக்கெல்லாமா பேப்பர்ல போட்டோ போடுவாங்க என்று கூறியுள்ளார். இன்னும் என்னென் பண்ணனுமே பண்ணுங்க சீரியல்தான எதுவேனாலும் பண்ணலாம் என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் பலரும் இந்த சீரியல் குறித்து விமர்சனங்களையே பதிவிட்டு வருகின்றனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் நீஙக என்ன பண்ணாலும் மாயன் வரமாட்டான். அவன் கூடத்தான் நீங்க போகனும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நீங்க ப்ளான் போட்டுக்கிட்டே இருங்க மாயன் அங்க ஸ்கோர் பண்ணிகிட்டே இருப்பான் என்று கூறியுள்ளார். அவங்க எல்லாரும் ஒன்னுதான் நீங்க ரெண்டுபேரும் தனிதான் இது எப்போ முடிவுக்கு வருதே அப்போ சீரியல் முடிஞ்சிடும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் மாயனுக்கு ஆதரவாகவே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர், செண்பகமே செண்பகமா நடிக்கனுமா?? சூப்பர்ங்க உங்க ஸ்டோரி என கூறியுள்ளார். போலி அனு ஒரிஜினல் அனுவா நடிக்கிறா இப்போ ஒரிஜினல் செண்பகத்தை போலி செண்பகமாக நடிக்க சொல்றாங்க என்னயா நடக்குது இங்க என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். இதில் ஒரு சில ரசிகர்கள் இந்த எபிசோடுக்காக வெயிட் செய்வதாகவும், மற்றும் பலர் இன்னும் எத்தனை நாள்தான் இப்படி இழுத்துட்டு போவீங்கனு பாக்குறோம் என்று கூறியுள்ளர்ர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலம். அஞ்சலி வளைகாப்பில் அடுத்து என்ன நடக்கும் என்பதே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என் நம்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment