Advertisment

Tamil Serial Rating : வீட்டுக்கு தெரியாமல் தப்பு பண்ணுறீங்களே கோபி சார்... இது தேவையா?

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : வீட்டுக்கு தெரியாமல் தப்பு பண்ணுறீங்களே கோபி சார்... இது தேவையா?

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இதே சீன் இன்னும் எத்தனை நாளைக்கு ஓட்டுவீங்க கதைக்கு வாங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தனத்துக்கு வீட்ல இருக்க எல்லார் மேலயும் பாசம் அதிகம் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் லஷ்மி அம்மாவுக்கு கண்ணன பார்க்க பிடிக்கல ஆன அவன நெனச்சி சாப்பிடாம இருப்பாங்க என்ன இது என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாண்டியன ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்பை இழந்துவிட்டது என்றே பதிவிட்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பரவாயில்லை கண்ணம்மா சித்தி இப்படி மாறிட்டாங்களே என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் லக்ஷ்மி அப்பா பாரதி தான் அப்படினு அவளுக்கு மட்டும்தான் தெரியாது மற்ற எல்லாருக்கும்தெரியும் என்று கூறியுள்ளார்.  எல்லாரும் ஒன்னாதான் இருக்கீங்க இப்போ அந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுப்போமா என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த கதையெ இன்னும் 10 வருஷத்திற்கு ஓட்டுவீங்களா என்று கேட்டுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வீட்டுக்கு தெரியாமல் தப்பு பண்ற எல்லாருக்கும் இப்படிதான் நடக்கும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி நல்லவரா கெட்டவரா? காமெடியும் பண்றாரு சீரியஸாவும் நடிக்கிறாரே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இதற்கு பேசாம வீட்டில உண்மைய சொல்லிட்டு வேற வேலைய பாத்துக்கிட்டு போகலாம் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபி கேரக்டர் குறித்து விமர்சனங்களையே பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரொம்ப ஓவரா இருக்கு கதைய விட்டுவிட்டு ஏதேதோ பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கூறியுள்ளார். போலி போலிச கண்டுபிடிச்சதுக்கு பாராட்டு விழாவா நடத்துங்க என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த காட்சி குறித்து விமர்சனங்களையே பதிவிட்டுள்ளனர்.

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஒவ்வொரு குடும்பத்திலேயும் இப்படி ஒரு கேரக்டர் இருக்கத்தான் செய்யுது என்று கூறியுள்ளார்.  மற்றொரு ரசிகர் மாயன் தான் உங்களுக்கு ஆதரவா இருக்காரே அப்புறம் என்ன என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மாயன் கேரக்டருக்கு வாழத்து சொல்லும வகையில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பிரியா வுக்கு. டி. என். ஏ. டெஸ்ட். எடுத்து பார்க்கலாம்ன்னு. பெரியவர். சொன்னது தான் சூப்பர் என்று கூறியுள்ளார். ரோஜா நாடகத்தில் இன்னும் 2 வருடத்திக்கு அனுவிற்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க விடமாட்டான் இயக்குனர் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அனு முகத்தை பார்த்தால் சிரிப்பு சிரிப்பா வருது.. என கூறியுள்ளார். அந்த பிச்சைக்காரர் குரலைக் கேட்டா பாலு குரல் மாதிரி இருக்கு என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். இந்தமாதிரி ப்ரொமொ பொட்டிங்கனா ரொம்ப சந்தோஷம் மேலும் மேலும் முதல் இடத்தை அமையனும் என கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக வரவேற்பு உள்ளது என கூறலாம். அஞ்சலி வளைகாப்பு நிகழ்ச்சியில் உண்மையை சொல்லும் காட்சிக்கே ரசிகர்கள் அதிகம் காத்திருக்கின்றனர். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial Tamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment