Advertisment

கண்ணம்மா டாப்... விஜய் டிவியில் மற்ற சீரியல்கள் தடுமாற்றம் ஏன்?

Tamil Serial Update : தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

author-image
WebDesk
New Update
கண்ணம்மா டாப்... விஜய் டிவியில் மற்ற சீரியல்கள் தடுமாற்றம் ஏன்?

Tamil Serial TRP Rating Update : சினிமாவை விட தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருவது சீரியல். தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதால், சீரியல் பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத மேலும் அதிகரிக்கும் வகையில், தொலைக்காட்சிகள் மாதத்திற்கு ஒரு புது சீரியலை களமிறக்கி வருகின்றன. மேலும் சீரியல்கள் ஒளிபரப்புவதில் ஒரு சில தொலைக்காட்சிகள் மட்டுமே முன்னணியில் இருந்து வருகிறது.

Advertisment

இதில் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சன்டிவிக்கும் – விஜய்டிவிக்கும் இடையே  தான் பரபரப்பான போட்டி இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கும், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கும்தான் கடும்போட்டி நிலவி வருகிறது. இதில் ரோஜா சீரியல் விஜய் டிவியின் ஒரு சில சீரியல்களுடன் போட்டியில் இருந்தாலும் பாரதி கண்ணம்மா சீரியலுடன்தான் அதிகம் போட்டியிட்டுள்ளது.  

அந்த வகையில் தற்போது தற்போது வெளியாகியுள்ள கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தில் உள்ளது. ஆனால் இதை தவிர விஜய் டிவியின் வேறு எந்த சீரியலும் டாப் 6 ரேட்டிங்கில் இடம் பெறவில்லை. இதில் டாப் 5 லிஸ்டில் அடுத்த நான்கு இடங்களை சன் டிவி  சீரியல்களே ஆக்கிரமித்துள்ளன. 2-வது இடத்தில் ரோஜா 3-வது இடத்தில் வானத்தை போல, 4-வது இடத்தில் பூவே உனக்காக, 5-வது இடத்தில் சுந்தரி 6-வது இடத்தில் கண்ணான கண்னே ஆகிய சீரியல்கள் இடம்பிடித்துள்ளன.

இதில் விஜய் டிவி சீரியல்கள் வீழ்ச்சியை சந்தித்து ஏன் ஏன்பது குறித்து பெரும் விவாதமே உருவாகியுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5-ல் விஜய் டிவியின் 2 அல்லது 3 சீரியல்கள் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது முதலிடத்தை மட்டும் பிடித்து மற்ற 4 இடங்களை கோட்டை விட்டது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சீரியல்களின திரைக்கதை என்று சொல்லாம்.

விஜய்டிவியில் பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி, ராஜாராணி 2, நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியல்களே அதிகளவில் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து வந்தன. இதில் தற்போது பாண்டியன்ஸ்டோர்ஸ் 7-வது இடத்திலும், பாக்யலட்சுமி சீரியல் 8-வது இடத்திலும், ராஜா ராணி 2 9-வது இடத்திலும், உள்ளது. இந்த சீரியல்கள் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தாலும், முன்னணியில் இருந்து வந்தது.

இதில்  விஜய்டிவியின் ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டேர்ஸ் முன்னணியில் இருந்து வந்த போது, கண்ணன் கேரக்டர் திருமணம் செய்துகொண்டதில் இருந்து கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் கண்ணன் ஐஸ்வர்யாவை சுற்றியே கதை நகர்வதால்  கதையில் சுவாரஸ்யகும் குறைத்துள்ளதாக  ரசிகர்கள் கூறியுள்ளனர்.  இதுவே பாண்டியன் ஸ்டோர் ஸ் சீரியல் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் என்று கூறலாம். பாக்யலட்சுமி சீரியலில் முன்னணி கதாப்பாத்திரமான பாக்யாவுக்கு அடிப்பட்டதில் இருந்து கதையில் ஒரு தோய்வு ஏற்பட்டுள்ளது. அதிலும் கோபி கதாப்பாத்திரம் வீட்டில் எப்போது மாட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், அவரை ஒவ்வொரு முறையும் காப்பாற்றுவது போன்ற திரைக்கதை ரசிகர்களின் ரசனையை சோதிக்க்கும் வகையில் உள்ளது.

ராஜா ராணி சீரியலில் வில்லி அர்ச்சனா தவறு செய்யும்போதெல்லாம் தப்பித்துக்கொள்வதும் சந்தியாவை எப்போதும் மாமியார் சிவகாமியை திட்டிக்கொண்டே இருப்பதும் ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறலாம். அதேபோல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் கதாப்பாத்திரம் தனியாக இருந்தபோது முத்துராசுவை கொன்றது யார் என்ற எதிர்பார்ப்பு பெரியளவில் இருந்தது. ஆனால் மாயனின் தம்பி மாறன் கதாப்பாத்திரம் உள்ளே நுழைந்ததில் இருந்து கதை வேறு திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை.

மொதத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் திரைக்கதை மாற்றம் மற்றும் ரசிகர்கள் எளிதில் யூகிக்க்க்கூடிய வகையிலான காட்சிகள் மட்டும் தான் என்று கூறலாம். ஆனால் இந்த சிக்கலில் இருந்து தப்பித்து பாரதி கண்ணம்மா விஜய்டிவியை டிஆர்பி ரேட்டிங்கில் கொஞ்சம் காப்பாற்றியுள்ளது.   

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment