Advertisment

Sun TV Serial : பழனி கையில் சிக்கிய கார்த்திக் போட்டோ... சுந்தரிக்கு தெரிய வருமா?

Sundari Serial Update : சுந்தரி சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Sun TV Serial : பழனி கையில் சிக்கிய கார்த்திக் போட்டோ... சுந்தரிக்கு தெரிய வருமா?

Tamil Serial Sundari Serial Episode Update : சுந்தரியை அவரது கணவர் ஒதுக்கியே வைத்து இருப்பது பற்றி வருத்தப்படும் அவரது அம்மா இதற்கு மேல ஒரு அம்மாவா என்னால பேச முடியாது என சொல்லிவிடுகிறார். அதன்பிறகு உள்ளே சென்று சுந்தரியை நினைத்து அவரது அம்மா கண்ணீர் விட மறுபுறம் சுந்தரியும் அழுதுகொண்டிருக்கிறார்.

Advertisment

இதனிடையே இரண்டாவது மனைவி அனுவுடன் இருக்கும் கார்த்தி வழக்கம்போல பொய் மேல் பொய்யாக சொல்லி கோபமான இருக்கும் அவரை சமாளிக்கிறார். அதன் பின் அனு அவரது போனை கேட்க, ஷாக் ஆகும் கார்த்தி,.போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைக்கிறார்.

இதற்கிடையெ நள்ளிரவில் சுந்தரி வீட்டின் முன்பு வரும் கிருஷ்ணா, அங்கு எதையோ தேடிக்கொண்டிருக்க, பழனி அதை பார்த்துவிடுகிறான். அதன்பிறகு பழனி, அவர் நம்மிடமிருக்கும் போட்டோவை தான் தேடிக்கொண்டு இருக்கிறார். அதை வைத்து என்ன செய்கிறேன் பார் என நண்பரிடம் கூறுகிறார். சற்று நேரம் தேடிவிட்டு அங்கு எதுவும் கிடைக்காததால் கிருஷ்ணா அங்கிருந்து புறப்படுகிறான்.

இந்நிலையில், லாரியில் தூங்கிகொண்டிருக்கும் பழனி மற்றும் அவனது நண்பரை, சுந்தரி சாப்பிட அழைக்கிறார். இதில் பழனி மறுத்தாலும் நண்பர் உடனே வருவதாக கூறிவிடுகிறார். இதனிடையே கிருஷ்ணாவுக்கு போன் செய்யும் பழனி,  கார்த்திக் வேறொரு பெண் உடன் இருக்கும் போட்டோ தன்னிடம் இருப்பதாக கூறி அவனை வரவழைக்கிறான்.

அதன்பிறகு கிருஷ்ணா அங்கு வந்து பழனியிடம் பேசி, அந்த போட்டோவை கிழித்து போட வைக்கிறார். இதனால் சந்தோஷமடையும் கிருஷ்ணா போகும்போது, பழனிக்கு 500 ரூபாய் கொடுத்துவிட்டு போகிறார். இதை பற்றி யோசிக்கும் பழனி, கிழிந்த போட்டோவுக்கே 500 கொடுக்கிறார் என்றால் ஏதோ விஷயம் இருக்கிறது என சந்தேகப்பட இன்றய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sundari Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment