Advertisment

முதல் வாரத்திலேயே எகிறிய டிஆர்பி... சந்தோஷத்தில் சன்டிவி சீரியல் டீம்

Tamil Serial Update : ராஜா ராணி புகழ் சஞ்சீவ் நாயகனாக நடிக்கும் கயல் சீரியல் முதல்வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
முதல் வாரத்திலேயே எகிறிய டிஆர்பி... சந்தோஷத்தில் சன்டிவி சீரியல் டீம்

Kayal Serial TRB Rating Update : சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னிணி தொலைக்காட்சிகளில் ஒன்று சன்டிவி. காலை முதல் நள்ளிரவு வரை பல சீரியல்கள் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அனைத்து சீரியல்களுமே ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று கூறலாம். அதில் பழைய சீரியல்கள் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில் சன்டிவி புதிய சீரியலைகளை களமிறக்கவும் தவறுவதில்லை.

Advertisment

அந்த வகையில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயல். ராஜா ராணி சீரியல் புகழ் நடிகர் சஞ்சீவ் நாயகனாக நடிக்கும் இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக அவருக்கு ஜோடியாக ஜீ தமிழ் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். ப்ரைம் டைமான இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தொடங்குவதற்கு முன்பு வெளியான ப்ரமோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

விஜய்டிவியின் காற்றின்மொழி சீரியல் நிறைவடைந்ததை தொடர்ந்து நடிகர் சஞ்சீவ் சன்டிவி சீரியலில் களமிறங்கியுள்ளார். இந்த சீரியல் தனது பயணத்தை தொடங்கிய முதல் வாரத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. தற்போது சன்டிவி சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கயல் சீரியல் 10.66 புள்ளிகள் பெற்று மற்ற சன் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

முதல் வாரத்திலேயே இந்த அளவுக்கு வரவேற்பு கிடை்த்திருப்பது கயல் சீரியல் குழுவினர் மற்றும் நடிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment