Advertisment

அவருக்குப் பதில் இவர்... குஷ்பூ சீரியலில் திடீர் மாற்றம்!

கணவரின் அணுகுமுறையைத் தவிர்க்குமு் மீரா கணவனை பிரிந்து வாழ முடிவு செய்து அவ்வாரே பிரிந்தும் சென்றுவிடுகிறார்.

author-image
WebDesk
New Update
அவருக்குப் பதில் இவர்... குஷ்பூ சீரியலில் திடீர் மாற்றம்!

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு தற்போது சினிமா அரசியல் சின்னத்திரை என படு பிஸியாக இயங்கி வருகிறார். இதில் பெண் விடுதலை முற்போக்கான கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்து வரும் மீரா சீரியலில் முதன்மை கேரக்டரில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த சீரியலுக்கான கதையை எழுதியுள்ளார்.

Advertisment

குடும்பத்தில் கணவன்-மனைவிக்கு இடையேயான கசப்பான-இனிப்பு உறவையும், அவர்கள் பிரிந்த வாழ்ந்து வரும் வருடங்களை பற்றி விரிவாக சொல்லப்படும் இந்த சீரியல் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்துவிட்டது என்றே சொல்லாம். இதில் மீரா என்ற டாக்டர் வேடத்தில் குஷ்புவும், அவரது கணவர் கிருஷ்ணா என்ற டாக்டர் வேடத்தில் சுரேஷ் சந்திர மேனன் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில். தற்போது மீரா சீரியலில் இருந்து திடீரென சுரேஷ் சந்திர மேனன் விலகியுளளார். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறிவிட்டதாக கூறப்படும் நிலையில், இனி வரும் எபிசோட்களில் அவருக்குப் பதிலாக சுரேஷ் பாபு 'கிருஷ்ணா' கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே சன் டி.வி.யின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்து நடித்திருந்தனர்.

கிருஷ்ணா தனது மனைவி மீராவை அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு முன்னிலையில் அறைகியார். இதனால் கணவரின் அணுகுமுறையைத் தவிர்க்குமு் மீரா கணவனை பிரிந்து வாழ முடிவு செய்து அவ்வாரே பிரிந்தும் சென்றுவிடுகிறார். இப்படி சென்று. 16 வருட இடைவெளிக்குப் பிறகு, குழந்தைகள் முழுமையாக வளர்ந்த பிறகு கதைக்களம் தொடங்குகிறது. குடும்பம் மீண்டும் ஒன்று சேருமா? மீராவால் கிருஷ்ணாவை மீண்டும் ஒருமுறை காதலிக்க முடியுமா என்பதை பரபரப்பாக சொல்லும் கதைதான் மீரா.

பல்வேறு சமூக-பொருளாதாரப் பின்னணியில் உள்ள பெண்கள், அவர்கள் நன்கு படித்தவர்களாக இருந்தாலும் அல்லது நகர்ப்புற மக்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, இதுபோன்ற கொடூரங்களைச் சந்திக்கிறார்கள் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துவதே ‘மீரா’ சீரியலின் நோக்கம்.

இது தொடர்பான குஷ்பு கூறுகையில்., "ஒரு பெண் உடல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகத்திற்கு ஆளாவை சகித்துக்கொண்டால், அவளின் நடத்தை அவளது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் . ஒரு ஆண் அடித்தால் பரவாயில்லை என்று என்று ஒரு பெண் நினைத்தால். அதே ஒரு ஆண் குழந்தை ஒரு பெண்ணை அடிப்பது என் பிறப்புரிமை என்று குழந்தைகளும் நினைக்கலாம்.

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பார்க்கும்போது, ​​இது குறித்த 'முதல் பாடம் வீட்டிலிருந்து தொடங்குகிறது' என்று சொல்கிறோம். அதுதான் எங்கள் கதையின் கரு என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Khushbu Sundar Colors Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment