Advertisment

சன் டிவி முக்கிய சீரியலில் இருந்து விலகிய பிரபலம்: புதுசா வர்றது யார் தெரியுமா?

Tamil Serial : சன்டிவியின் தாலாட்டு சீரியலில் நடித்து வந்த நடிகர் தற்போது திடீரென அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

author-image
WebDesk
New Update
சன் டிவி முக்கிய சீரியலில் இருந்து விலகிய பிரபலம்: புதுசா வர்றது யார் தெரியுமா?

Tamil Serial Thalattu Update : தமிழில் சீரியல்கள் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளில் சன்டிவிக்கு முக்கிய இடம் உண்டு. காலையில் தொடங்கி நள்ளிரவு வரை பல சீரியல்கள் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றன. அதிலும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதால் , அடிக்கடி புதிய சீரியல்கள் ஒளிபரப்புவதில் சன்டிவி ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தொடங்கியது தாலாட்டு சீரியல்.

Advertisment

ஸ்ருதிராஜ், கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப உறவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் பரபரப்பும் விறுவிறுப்பும்குறையாமல் தினசரிஎபிசோடுகள ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது 100 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ஒருவர் திடீரென சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

publive-image

பல வருடங்களாக சன்டிவி தொடர்களில் நடித்து வரும் நடிகர் ரிஷிகேஷ் இந்த சீரியலில் நாயகனின் அப்பாவாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது திடீரென இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். இவர் விஜய் டிவியின் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் அப்பாவாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தாலாட்டு சீரியலில் ரிஷிகேஷ் கதாப்பாத்திரத்தில் நடிக்க தற்போது பொள்ளாச்சி பாபு ஒப்பந்தமாகியுள்ளார். காமெடி கலந்து வில்லன் கதாப்பாத்திரத்தில் கலக்கி வரும் பொள்ளாச்சி பாபு. சன்டிவியின் தங்கம் உள்ளிட்ட பல தொடர்களில் காமெடி மற்றும் வில்லன் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Thalattu Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment