Advertisment

Tamil Serial Rating : ஒரே போரா இருக்கு... கதையை எப்பதான் முடிப்பீங்க..! ரோஜா சீரியலுக்கு வந்த சோதனை

Tamil Serial News : தமிழ் சீரியலில் இன்று எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : ஒரே போரா இருக்கு... கதையை எப்பதான் முடிப்பீங்க..! ரோஜா சீரியலுக்கு வந்த சோதனை

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணன் பிரச்சனை – தனம் வளைகாப்பு

இந்த ப்ரமோவை பார்த்த பலரும் ஜீவாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் மாமனார்க்கு மாப்பிளைதா மகன் என்று நிரூபிச்சிட்டார் நம்ப ஜீவா என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இனி மீனாவுக்கு பெருமை தாங்காது... எனவும், அப்போ அப்போ அடுச்சுக்கிருவாங்க... ஆனால் மாமா னு வந்துட்டா ஒன்னு கூடி இருகாங்க.... எனமற்றொரு ரசிகரும் பதிவிட்டுள்ளனர்.

மேலும் மகன் இல்லாத அப்பாக்களுக்கு எல்லாம் மருமகனே மகன் என்றும், இப்படி ஒரு மருமகன் கிடைத்தால் நல்லா இருக்கும் என்றும், பதிவிட்டுள்ள நிலையில், சில ரசிகர்கள் கலாய்த்தும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு ரசிகர் ஜீவா மைன்ட் வாய்ஸ் என்று சொல்லி இனி கொஞ்ச நாள் மீனா நல்லவலா இருப்பா என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஆமா , இவனுங்க ஹாலிவூட் படத்தையே மிஞ்சிறுவானுங்க என் பதிவிட்டுள்ளார்.

இதில் ஒரு ரசிகர் புதுசு புதுசா ஒரு சீன கண்டுபிடிச்சு ஒரு week ka ஓட்டுறீங்க. அதுலயும் போனா வாரம் ஓட்டு நீங்களே கதிர் பிளஸ் டூ ல நல்ல மார்க்கு வாங்கி இருக்கான் அம்மா என்னால தாங்க முடியல என பதிவிட்டுள்ளார். மற்றொருவர் ஆனாலும் ரொம்ப அநியாயம் பன்றிங்கடா ஏலேய் என பதிவிட்டுள்ளா.

பாரதி கண்ணம்மா

ஹேமா உடல்நிலை – பாரதி கண்ணம்மா சந்திப்பு

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் கலாய்த்தே வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் பாரதிக்கு ஒண்ணும் ஆகாது. பாக்கற நமக்குத்தான் டென்சன் ஆகும் என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணம்மாவின் மைண்ட் வாய்ஸ் என்று சொல்லி இவன் பொண்ணு பரலோகத்துகு போகாம தடுக்க பாத்தா இவன் ஸ்பீடா ஆ ஓட்டி நம்மல பரலோகத்துகு அனுப்பிடுவான் போல என பதிவிட்டுள்ளார்.

இதில் ஒரு ரசிகர் சீக்கிரம் இவங்க ரெண்டு பேரும் சேத்து வைங்க டைரக்டர் சார் என்று பதிவிட்டுள்ளார். இந்த சீன் முடியும் வரை தான் பாரதி இப்படி இருப்பார். அப்புறம் பழையபடி வெண்பாவுடன் சேர்த்துடுவார்... என் மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கண்ணம்மா அப்படியே அந்த டி என் ஏ டெஸ்ட எடுக்க சொல்லி இருக்கலாமில்ல என கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் அது எப்படி..கரெக்டா ஒருத்தன் வந்து இடிப்பானாம்.. இவரு உன் புருஷன்தான னு கேப்பானாம் என்னடா இது என பதிவிட்டுள்ளார். இவன் கூட போறதுக்கு பதிலாக...நடந்து போனா கூட பத்திரமாக போய்டலாம் போல... என கண்ணம்மா மனதிற்குள் நினைப்பது போல பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீரியல் ல பாரதி பன்றத பாத்தாலே போதும் 'பிரஸ்ஸர்' தானா வந்துடும் என பதிவிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி

பாக்யா சமையல் – கோபி – மயூ சண்டை

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும், கோபியை செம்மையாக கலாய்த்து வருகினறனர். பாவம் கோபி மாமா என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அய்யொ நிலைமை இப்படி ஆகிடுச்சே கோபி என்று பதிவிட்டுள்ளா. மற்றொரு ரசிகர் எப்பா டேய் நல்லா பண்றீங்கடா என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சிரிப்பது போலவும், கலாய்ப்ப போலயும் ஸ்டிக்கர்களை பதிவிட்டு வருகின்றனர்.

ராஜா ராணி

சரவணன் சந்தியா புரிதல் இல்லாமை – மாமியார் கோபம்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தியாவுக்கு ஆதரவாகவும், சிவகாமிக்கு எதிராகவும் கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். சநதீயா எவ்வளவுதான் தவறு செய்யமாமல் இருந்தாலும் அவரை குற்றம் சொல்லியே துன்புறுத்தும் மாமியார் சிவகாமி என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

ரோஜா

அனு ஆஸ்பத்திரியில் – ரோஜா ஜெயிலில்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் செம்மையாக கலாய்த்து வருகின்றனர். இதில் ஒரு ரசிகர் ஆண்கள் ஜெயில்எந்த ஊர்ல டா பெண்கள் ஜெயில் ஓட ஒட்டி இருக்கு கதை ய கூட ஒழுங்கா எடுக்க மாட்டீங்களா என கூறியுள்ளார். இப்படி ஒரு அப்பன எங்கேயாவது பாக்க முடியுமா.....வக்கீலா இருந்துகுட்டு கிரிமினல் வேல பாக்காரு டைகர் என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் இப்படி ஒரு கேவலமான சீரியல் எடுக்குற டைரக்டர எத கொண்டு அடிச்சாலும் தப்பில்ல என கூறியுள்ளார். என்னதான் சீரியலா இருந்தாலும் ஞாயம் வேணாமாடா என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். இந்த டைரக்டர எதைக் கொண்டு வேணாலும் அடிக்கலாம். சரியான மொக்கையா எடுக்குராரு. ஒரே அறுவையா இருக்கு... என பதிவிட்டுள்ளார். இந்த கதையா எப்போ தான் முடியப்பிங்க என ஒரு ரசிகர் பதிலிட்டுள்ளார்.

இது எல்லாம் ஒரு சீரியல் முதலில் நிறுத்துங்கள். நாங்க எல்லாம் பைத்தியம் னு நினைச்சீங்களா என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். கத விட்றத்து ஒரு அளவே இல்லாம போச்சே டைரக்டர் சார்.......அப்பா....தாங்கலடா.... என மற்றொருவர் கூறியுள்ளார். பக்கத்து ரூம்ல்ல இருந்து கூப்பிடவே சரியா கேட்காது இத்துள்ள இதெல்லாம் ரெம்போ ஓவர்டா என பதிவிட்டுள்ளார்.

இதில் ரசிகர்களின் கருத்துப்படி இன்றைய எபிசோட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்று கூறலாம். மற்றபடி பாரதி கண்ணம்மா சீரியல் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமல் இழுத்துகொண்டே செல்கின்றனர். டிஆர்பியில் டாப்பில் இருக்கும் ரோஜா சீரியலில் நம்ப முடியாத கட்சிகள் இருப்பதால் ரசிகர்கள் கலாயத்து வருகின்றனர். மற்றபடி அந்தந்த சீரியல் அவர்களது ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று நம்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment