உலகை எட்டிப்பார்த்த முதல் நாள்: ஆலியா பாப்பா Unseen வீடியோ ரிலீஸ்

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஆல்யா மானசா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் சீரியலில் முன்னணி நடிகையான ஆல்யா மானசா தனது மகள் ஐலா பிறந்த உடன் எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியலின் மூலம் புகழ் பெற்ற வர் ஆல்யா மானசா. அதே சீரியலில் தன்னுடன் நடித்த சக நடிகர் சஞ்சீவை காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பெண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஐலா சயத் என பெயர் சூட்டினார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஐலாவின் முதல் பிறந்தநாளை பெரிய விழாவாக கொண்டாடினார்கள். அன்றைய தினம் சஞ்சீவ் விலையுயர்ந்த கார் ஒன்றை ஆல்யாவுக்கு பரிசளித்து இருந்தார். தற்போது சஞ்சீவ் தனது குழந்தை பிறந்த முதல் நாள் எடுத்த ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெளியிட்டு உள்ளார்

இந்த வீடியோவில் குழந்தையை முதல் முறையாக சஞ்சீவ் கையில் வாங்கிய நெகிழ்ச்சியான தருணம் அது. இந்த வீடியோவுக்கு “Aila papa’s unseen 1st day vdo ������ You can watch full vdo on your YOUTUBE channel ” என ஆல்யா மானசா தெரிவித்து உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial update actress alya manasa release unseen video

Next Story
குக் வித் கோமாளி ஃபைனலை மிஸ் செய்த விஜே பார்வதி… என்ன காரணம்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com