Advertisment

கண்ணம்மா 'உயிரை'யே கேட்குறீங்களே... ஷாக் கொடுத்த சௌந்தர்யா!

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா ராஜா ராணி மகாசங்கமம் இன்றைய எபிசோட் அப்டேட்

author-image
WebDesk
New Update
கண்ணம்மா 'உயிரை'யே கேட்குறீங்களே... ஷாக் கொடுத்த சௌந்தர்யா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, இந்த இரு சீரியல்களும், தனித்தனியாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த இரு சீரியல்களையும் ஒன்றாக இணைத்து மகாசங்கமம் என்ற பெயரில் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீரியல்களில் உள்ள குடும்பங்கள் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்வது போல காட்சியமைக்கப்பட்டிருந்தது.

Advertisment

இதில் தற்போது இந்த ஷோவின் இறுதிப்போட்டி நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து இரு குடும்பங்களும் அவர்களின் வீடுகளுக்கு செல்ல தயாரகி வருகின்றனர். இதில் நேற்றைய எபிசோட்டில் என்ன நடந்த்து என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

போட்டியில் பங்கேற்ற அனைவரும்  தங்களது வீடுகளுக்கு செல்ல தயாராகி வரும் போது, கண்ணம்மாவிடம் வரும் கஸ்தூரி, என்னாச்சு கண்ணம்மா கிளம்பலையா? என்று கேட்கிறார். அதற்கு கண்ணம்மா ஆமா அவ்வளவு தான் வேலை முடிஞ்சது கிளம்பனும் என சொல்கிறார். இங்க இவ்வளவு நாளா எப்படி சந்தோஷமா இருந்தியா, என கஸ்தூரி கேட்க, பாரதியுடன் நடந்த சண்டை பற்றி கூறும் கண்ணம்மா,  இது மட்டும் பிரச்சனை இல்லை அத்தை குடும்பத்துல இருந்து எல்லாரும் வந்துருக்காங்க, லட்சுமி அவங்ககிட்ட பேசி ஏதாவது சொல்லிருவாங்களோன்னு பயமாவே இருந்துச்சு என சொல்கிறாள்.

அப்போது அங்கு வரும் லட்சுமியிடம் நம்ம போகணும்ல கிளம்பு என கண்ணம்மா சொல்கிறாள். ஆனால் லட்சுமி இன்னும் ஒரு வாரம் இங்க இருப்போமா? என கேட்கிறாள். இதனால் கோப்படும் கண்ணம்மா இது என்ன உங்க அப்பாவிட்டு சொத்தா' என கேட்டு அடிக்க போகிறார். இடையில் கஸ்தூரி அவளை தடுத்து, சின்ன பிள்ளைகிட்ட இப்படி நடந்துக்குற, அவ ஏதோ ஆசையில கேட்கிறாள் என கூறுகிறார்.

அடுத்து சௌந்தர்யாவிடம் வரும் கஸ்தூரி கண்ணம்மா நடந்துகொண்டது குறித்து கூறுகிறாள். மேலும் இதுக்கு அப்புறம் வளரவளர லட்சுமி மனசுல இன்னும் ஆசை வளரும். நீங்க கண்ணம்மா கிட்ட லட்சுமியை வளர்க்குறது பற்றி கேட்டு பாருங்க என சொல்கிறாள். அதன்படி கண்ணம்மாவிடம் கஸ்தூரி சொன்னதை கேட்கிறாள். நீ ஒத்துக்க மாட்டான்னு தெரியும், அவளுக்கு எந்த நல்லதும் செய்ய முடியலன்னு என் மனசு அடிச்சுக்குது. 'லட்சுமியை என்கிட்ட கொடுக்குறியா நான் வளர்க்குறேன் ' என சௌவுந்தர்யா கேட்கிறார்.

இதனால் அதிர்ச்சியடையும் கண்ணம்மா, இந்த உலகத்துல எனக்குன்னு இருக்க ஒரே சொந்தம் லட்சுமி தான். அவ என்னோட உயிர், என்னோட உயிரையே என்கிட்ட இருந்து கேட்குறிங்களே அத்தை, இதுக்கு நான் ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன். நீங்க நினைச்ச அவளை தங்கத்தாலே குளிப்பாட்ட முடியும், ஆனா தாய் பாசம், அதை 'நான் தானா அத்தை அவளுக்கு கொடுக்க முடியும்'. ஒரு தாயா என்னால முடிஞ்சத நான் அவளுக்கு செய்றேன் என கூறுகிறாள. இதை கேட்ட சௌவுந்தர்யா, இனிமே இதை பற்றி உன்கிட்ட பேச மாட்டேன் கண்ணம்மா என சொல்கிறாள்.



இதன் பிறகு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து விளையாடுனது, இதுல பாதி உங்களுக்கு சொந்தம் என கூறி பரிசுத்தொகையில் பாதியை சௌந்த்ர்யாவிடம் கொடுக்கிறாள். ஆனால் சௌவந்தர்யா அதனை வாங்க மறுத்த்தாலும், இந்தாங்க அத்தை என பிடிவாதாமாக கொடுக்கிறாள். அதனை தொடர்ந்து லட்சுமியை பார்த்து, நான் ஊருக்கு கிளம்புறேன். நல்ல படிம்மா, உன் அம்மாகிட்டயும் உன்னை நல்ல பார்த்துக்க சொல்லிருக்கேன் என சௌந்தர்யா சொல்லி, கண்ணம்மாவிடம் அவளை அனுப்பி வைக்கிறாள்.



அதன்பிறகு பாரதியை பார்த்து, என் பேச்சுக்கு கட்டுப்பட்டு ஒருவாரம் இங்க இருந்ததுக்கு நன்றி என கூறும் சௌந்தர்யா எண்ணெய் தான் எலிக்கு காயுது நீ ஏன்மா, பாரதி கூடவே சுத்துற என வெண்பாவை பார்த்து கேட்க, அதற்கு பாரதி 'அம்மா நான்தான் அவளை என்னோட கூட்டிட்டு வந்தேன்' என சொல்கிறான். இதற்கிடையில் கண்ணம்மாவை பார்த்து சரவணனும், சந்தியாவும் நாங்க கிளம்புறோம் என்று சொல்கின்றனர். கடைசி போட்டில நீங்க எனக்காக தானா விட்டு கொடுத்தீங்க என சந்தியா கேட்கும் போது, அதெல்லாம் எல்லாம் இந்த முழு போட்டிலையும் ஜெயிக்க கூடிய எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு என கண்ணம்மா சொல்கிறாள்.

இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. இதன் மூலம் போட்டிகள் முடிந்து அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்ல தயாராகி வருவதால், மகாசங்கமம் எபிசோட் இத்துடன. நிறைவடைந்து, இனி வரும் நாட்களில் இரண்டு சீரியல்களும் தனித்தனியாக ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Bharathi Kannama Rajarani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment