Advertisment

நடிகர் ஆர்யா படம் ரிலீஸ்... திடீர் டிரெண்டிங்கில் விஜே சித்ரா: கொஞ்சி மகிழும் வீடியோ

VJ Chitra Viral Video : ஆரியாவின் டெடி திரைப்படத்தால், சின்னத்திரை நடிகை சித்ராவின் வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
நடிகர் ஆர்யா படம் ரிலீஸ்... திடீர் டிரெண்டிங்கில் விஜே சித்ரா: கொஞ்சி மகிழும் வீடியோ

Tamil Serial Update VJ Chitra Viral Video : சின்னத்திரை நடிகை சித்ரா டெடிபியருடன் கொஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் விஜே சித்ரா. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது சின்னத்திரை பயணத்தைதொடங்கிய அவர், குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் திடீரென நிகழ்ந்த இவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணம் 3 மாதங்களை கடந்தாலும் சித்ரா குறித்து செய்திகள் நாளுக்குநாள் வந்த வண்ணமே உள்ளது. மேலும் நாள்தோறும் சித்ரா குறித்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடிகை சித்ரா ஒரு டெடிபியர் பொம்மையுடன் கொஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான டெடி படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரபலங்கள் பலர் டெடிபியர் பொம்மையுடன் இருக்கும் வீடியோ வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதனுடன் தற்போது விஜே சித்ராவின் வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த சித்ராவின் ரசிகர்கள் வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். இதனால் வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Vj Chitra Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment