Advertisment

Tamil Serial Rating : இந்த சீன் டிரெய்லர்தான்; மெயின் பிக்சர் வர இன்னும் பல வருடம் ஆகும்

Tamil Serial Update : சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Serial Rating : இந்த சீன் டிரெய்லர்தான்; மெயின் பிக்சர் வர இன்னும் பல வருடம் ஆகும்

Tamil Serial Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கூறலாம். அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இதனை தங்கவைத்துக்கொள்ளும் நோக்கில் நாள்தோறும் புதிய சீரியல்கள் களமிறங்கி வருகினறனர். பழைய சீரியல்கள் ஒருசில முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சீரியல் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

Advertisment

சுமார் 2 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் திரைப்படங்களை போல் இல்லாமல் நாள்தோறும் பல திருப்பங்களுடன் அரங்கேறி வரும் அரைமணி நேர சீரியல் எபிசோடுகளுக்கு ரசிகர்கள் அதிகம். இதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒவ்வொரு சீரியலுக்கும் தினசரி ப்ரமோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடுகளின் கதையை தீர்மானித்து விடலாம். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோக்களை வைத்து எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தனம் நல்லவங்கதான் ஆனா அவங்க அம்மா தான் குடும்பத்தில் உள்ளவர்களை பிரிக்கிறார் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் எப்படி இருந்த குடும்பம் இப்படி சிதறிப்போகிற நிலைமைக்கு வந்துவிட்டதே.... என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சமூகத்தில் நடப்பதை கண்முன் நிறுத்தியுள்ள சீரியல் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படிமெயின் கதைக்கு வாங்க சார் என்று கூறியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதிக்கு வெண்பாவை தவிர மத்த எல்லார் மேலையும் சந்தேகம் வரும் என்றும் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் தான் பொண்ணுதானு தெரியமலே இப்படி பண்றீங்களே பாரதி இதெல்லாம் எங்கபோய் சொல்ல என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் சீக்கிரமா உண்மையை சொல்லி சீரியலை முடிங்கப்பா என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இப்படியோ போய்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் இதற்கு முடிவே கிடையாதா என்று கேட்டுள்ளார்.

பாக்யலட்சுமி

கோபி சொந்த குடும்பத்தை விட ராதிகா மேலதான் அதிகமாக அக்கரை காண்பி்க்கிறார் என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் நாளைக்காவது சரியா மாட்டுவீங்களா கோபி என்று கேட்டுள்ளார். மேலும ஒரு ரசிகர் அப்போ இது கனவு இல்லையா ரியலா கோபி அவங்க அப்பாகிட்ட மாட்டிக்க போறாரா என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீனுக்காக வெயிட் செய்வதாகவே கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரேமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இப்போதான் சந்தியாவுக்கு தைரியம் வந்துருக்கு என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த அர்ச்சான எதுக்கு நடுல சீன் போட்டுக்கிட்டு இருக்கு என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அர்ச்சனாவுக்கு செம் நோஸ்கட் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவுக்கு எதிராகவும், சந்தியாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை கூறியுள்ளனர்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் செண்பகம் சீக்கிரமாக ரோஜாவை அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மறறொரு ரசிகர் நம்ம அர்ஜுன் ரோஜா சின்ன வயசுல பார்க்க வேண்டும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அனுவின் ஆட்டம் எப்ப ஒரு முடிவுக்கு வருமோ என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீன் டிரெய்லர்தான் மெயின் பிச்சர் வரதுக்கு இன்னும் வருஷக்கணக்காக ஆகும் என்று கூறியுள்ளனர்.

இந்த கருத்து்ககளை வைத்து பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம் செண்பகத்திற்கு பழைய நினைவுகள் வருவதே இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.   

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment