scorecardresearch

மனைவியா ஏத்துக்கிறேன்… ஆனா ஒரு கண்டிஷன்… கண்ணம்மாவுக்கு ட்விட்ஸ்ட் வைக்கும் பாரதி

Tamil Serial Rating : பாரதி என்ன கண்டிஷன் போட போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுவது தான் பாரதி கண்ணம்மாவின் உண்மை நிலை என்று கூறி வருகின்றனர்

Vijay TV Bharathi Kannamma Rating Update :விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் பாரதி கண்ணம்மா. அருண் பிரசாத் வினுஷா தேவி முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறியது. அதேபோல் ஒரு சில கேரக்டர்கள் மாற்றமும் நடைபெற்றது.

இதில் குறிப்பாக கண்ணம்மா கேரக்டரில் நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்பிரியன் விலகியதை தொடர்ந்து அவருக்கு பதிலாக வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார். தொடக்கத்தில் பெரிதாக கவனம் ஈர்க்காத இவர், தற்போது கண்ணம்மா கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறன்றனர். அதேபோல், பாதியின் தம்பி அகில் கேரக்டரும் மாற்றம் செய்யப்பட்டது.

மனைவி கண்ணம்மாவின் மீது சந்தேகத்தால் பிரிந்து வாழ்ந்து வந்த பாரதி அவரிடம் இருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்திற்கு செல்கிறார். இவரின் வாதத்தை ஏற்காத நீதிபதி, கண்ணம்மா பாரதி இருவரும் 6 மாதங்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்று சொல்லிவிடுகிறார். இந்த இடைவெளியில் வில்லி வெண்பா சமூக விரோத குற்றத்திற்காக சிறைக்கு சென்றுவிடுகிறார். அதன்பிறகு நடந்த எபிசோடுகள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ள வெண்பாவுக்கு அடுத்தடுத்து பலமான அடி விழுந்து வருகிறது. மருத்துவர் தொழில் செய்ய தடை இருந்தும் மருத்துவமனைக்கு சென்றதால், அவரின் மருத்துவனைக்கு சீல் வைக்கப்படுகிறது. அவரின் கைப்பிடியில் இருந்த பாரதி, தற்போது இவரை கண்டுகொள்வதில்லை. மாறாக பாரதியின் மனதை மாற்ற சாமியாரை அனுப்பி வைத்த வெண்பாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இப்படி வரிசையாக அடி வாங்கி வரும் வெண்பா அடுத்து என்ன மாஸ்டர் பிளான் செய்ய உள்ளார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க பாரதி கண்ணம்மாவை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் நீதி காத்த அம்மனுக்கு பொங்கல் வைக்கிறார். கண்ணம்மா பாரதி இருவரும் தனித்தனியாக பொங்கல் வைக்கின்றனர். இதில் யார் பொங்கல் முதலில் பொங்குகிறதோ அவர் பக்கமே நீதி இருக்கிறது என்று அர்த்தமாம். இதில் கண்ணம்மா பொங்கலே முதலில் பொங்கினாலும், வழக்கம்போல பாரதி தனது சந்தேக புத்தியை கைவிடுவதாக இல்லை.

இதனால் அடுத்து என்ன நடக்கும் எந்த கோவிலில் எந்த பூஜைக்கு செல்ல இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் விமர்சித்து வரும் நிலையில், தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் கண்ணம்மாவை வீட்டிற்கு அழைத்து வரும் பாரதி உன்னை எனது மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். உனக்கு அனைத்தையும் செய்கிறேன். ஆனால ஒரு கண்டிஷன் என்று சொல்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.

இதில் பாரதி என்ன கண்டிஷன் போட போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றுவது தான் பாரதி கண்ணம்மாவின் உண்மையான நிதர்சனம் என்று கூறி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் இது யாருடைய கனவாக இருக்கும் என்று யோசித்து வருவதாகவும் கூறியுள்ளனர். அதற்கு ஏற்றார்போல், ஏறகனவே இதுபோல் பல காட்சிகள் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. இந்த சீரியலை பார்க்கும் மக்களுக்கு பொறுமைசாளி அவார்டுதான கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பாரதி எப்படியும் கண்ணம்மா ஏற்றுக்கொள்ளும் கண்டிஷனை சொல்லப்போவதில்லை. இதனால் பாரதி சொல்லும் கண்டிஷன் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சொல்லாம். எப்படி இருந்தாலும், லட்சுமியின் அப்பா யார் என்று சொல்ல வேண்டும் என்பதே பாரதியின் கண்டிஷனாக இருக்கும். அப்படி கேட்டால் கண்ணம்மா கோபப்பட்டு ஹேமா தன் மகள் என்று சொல்லிவிடவும் வாய்ப்புள்ளது. எது எப்படியோ அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial vijay tv bharathi kannamma serial rating update with promo