Advertisment

சினிமாவில் ஹீரோவான சுந்தரி சீரியல் பிரபலம் : இதுவும் பெண் டைட்டில் தான்

ஜெய் ஸ்ரீநிவாஸ் நாயனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
சினிமாவில் ஹீரோவான சுந்தரி சீரியல் பிரபலம் : இதுவும் பெண் டைட்டில் தான்

90-களின் இறுதியில் வெள்ளித்திரையில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் சீரியலில் நடிக்க வந்துகொண்டடிருந்தனர். தற்போது இந்த நிலை மாறி சீரியலில் நடிக்கும் பல நடிகர் நடிகைகள் வெள்ளித்திரையில் அறிமுகமாகி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் சமூகவலைதளங்கள். இதன் மூலம் தங்களது நடிப்பு திறமைவை வெளிப்படுத்தி பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர்.

Advertisment

அந்த வகையில் வலைதளங்களில மூலம் பிரபலமாகி தற்போது சன். டி.வியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக சுந்தரி சீரியலில் லீடு ரோலில் நடித்து வருபவர் கேப்ரியல்லா. ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் தற்போது முன்னணி சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், சுந்தரி சீரியலில் இருந்து மற்றொரு பிரபலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீரியலில் சுந்தரியின் நண்பன் சித்து என்ற சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வரும் ஜெய் ஸ்ரீநிவாஸ் அந்த சீரியலின் 2-வது நாயகன் என்ற அளவுக்கு பில்டப் இருந்தாலும், அவரின் கேரக்டருக்கு அவ்வளவு முக்கியத்தும் இருப்பதாக தெரியவில்லை.

இந்த நிலையில்தான் தற்போது ஜெய் ஸ்ரீநிவாஸ் சினிமாவில் என்ட்ரி ஆகியுள்ளார். பெண்மையின் மகத்துவம் என்ற படத்தில்  ஜெய் ஸ்ரீநிவாஸ் நாயனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த சுந்தரி சீரியலின் சக நடிகர் நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Serial News Sundari Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment