Advertisment

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வருகை புரிந்த நடிகைகள் - படங்கள் உள்ளே!

Aishwarya Rajesh : கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஆடியவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வருகை புரிந்த நடிகைகள் - படங்கள் உள்ளே!

tamil serial celebrities

Tamil actresses who came from television to Cinema : தமிழ் சினிமாவுக்கும் சின்னத்திரைக்கும் ஒரு மெல்லிய கோடு தான் வித்தியாசம். படங்களில் நடித்து ஒரு புகழ் பெருவதற்கு ஈடாக, சின்னத்திரையில் தோன்றுபவர்களும் பேர் புகழுடன், அதிக ரசிகர்களையும் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகைகளை இந்த புகைப்பட தொகுப்பில் காணலாம்.

Advertisment

TV Star to Cinema Star, tamil actress தனக்குக் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து முடிப்பவர் எனப் பெயர் பெற்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ஆடியவர்.

TV Star to Cinema Star, tamil actress செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை, அதன் பிறகு சினிமா நடிகை என படிப்படியாக உயர்ந்திருக்கிறார் பிரியா பவானி ஷங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் ஒரு குழந்தையின் அம்மாவாக பிரியா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TV Star to Cinema Star, tamil actress முன்பே 2 சீரியல்களில் நடித்திருந்தாலும், சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் வாணி போஜனுக்கு நிறைய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. தற்போது வைபவுடன் ‘லாக்கப்’ என்ற படத்திலும், அசோக் செல்வனுடன் ‘ஓ மை கடவுளே’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

TV Star to Cinema Star, tamil actress திரைப்படங்களில் சப்போர்ட்டிங் ரோல்களில் நடித்து வரும் நீலிமா, முதன் முதலில் சின்னத்திரையில் தான் அறிமுகமானார். இப்போது கூட விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனை கிளி’ தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.

TV Star to Cinema Star, tamil actress பாபா படத்தில் மனீஷா கொய்ராலாவின் தங்கையாக சினிமாவில் அறிமுகமாகி மேலும் பல படங்களில் சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் சந்தோஷி. இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாழ்க்கை என்ற சீரியலின் மூலம் தான் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

Tv Serial Tv Show
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment